உலகம்
காஸ்ரோ அவர்களின் இறுதி மரியாதை நிகழ்வு உலகத்தலைவர்களுடன்...
25/11/2016 அன்று வெள்ளிக்கிழமை தனது 90-வது வயதில் காலமான கியூபாவின் புரட்சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதி வணக்க நிகழ்வும் மரியாதை நிகழ்வும் இன்று ஹவானாவில் உலகத்தலைவர்களின் பன்கேற்புடன் நடந்துவருகின்றது,.ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் மற்ற புரட்சிகர தலைவர்களின் போராட்டங்களை விளக்கும் பழைய படங்கள் காட்சிப்படுத்தப்பட்டும், கியூபாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டும் இந்த பேரணி நிகழ்வு தொடங்கியது.வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் பொலிவியா அதிபர் ஈவோ மொராலெஸ் ஆகியோர் உள்ளிட்ட உலக மற்றும் பிராந்திய தலைவர்கள், இந்த பேரணி நிகழ்வுக்காக ஹவானாவில் உள்ள புரட்சி…
C.I.A தலைவர் டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை
அமெரிக்க சீஐஏ இயக்குனர் டொனால் ட்ரம்பினை எச்சரித்துள்ளார். இரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை தான் கிழித்தெறியப் போவதாக டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியபடி அவர் நடந்து கொண்டால், அது பேரழிவாகவும், அதிகபட்ச முட்டாள்தனமாகவும் அமையும் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையான சிஐஏ அமைப்பின் இயக்குநர் ஜான் பிரன்னன்எச்சரித்துள்ளார்.புதிதாக பொறுப்பேற்கவுள்ள டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவின் வாக்குறுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும், சிரியாவில் வேண்டுமென்றே நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டுமென்றும் ஜான் பிரன்னன் தெரிவித்தார்.வெளியுறவுத் துறை விவகாரங்களில் அமெரிக்காவின் தற்போதைய…
காஸ்ரோ தான் கியூபா, கியூபா தான் காஸ்ரோ
கியூபா புரட்சியின் தந்தையும் கியுபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார். அவருக்கு வயது 90.ஃபிடல் காஸ்ட்ரோ உலகில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ஒரு சர்வாதிகாரி.அவரை ஒழித்துக் கட்ட அமெரிக்கா பல முறை முயன்றபோதும், காஸ்ட்ரோ ஒன்பது அமெரிக்க அதிபர்களைப் பார்த்துவிட்டார்.அவர் அமெரிக்காவுக்கு தொடர்ந்து முள்ளாகவே இருந்தார் - அமெரிக்காவின் கொல்லைப்புறத்தில் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர்.அமெரிக்காவின் ஆதரவு பெற்ற ஊழல் மிகுந்த பட்டிஸ்டா அரசை அகற்றவேண்டும் என்று காஸ்ட்ரோ திடமாக இருந்தார்.காஸ்ட்ரோவும், அவரது சக புரட்சியாளர்களும் அவர்கள் ஒளிந்திருந்த மலைப் பகுதியிலிருந்து…
மறைந்த கியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்
மறைந்த கியூபப் புரட்சியின் தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ குடல் உபாதை காரணமாக 2006ல் தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிற்கு தற்காலிகமாக தனது அதிகாரங்களை வழங்கினார்.பின்னர் இரண்டாண்டுகளுக்குப் பிறகு, ரவுல் காஸ்ட்ரோ முழுமையாகப் பதவிப் பொறுப்பேற்றுக்கொண்டார்.கியூபா புரட்சியின் தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்தார்உலக வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் ஃபிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கையில் இருந்து சில முக்கிய துளிகள்1926 : கியுபாவின் தென் கிழக்கு மாநிலமான ஓரியண்ட் மாகாணத்தில் பிறப்பு.1953: பட்டிஸ்டா அரசுக்கு எதிராக நடத்தி தோல்வியில் முடிந்த கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய பிறகு சிறை…
கியூபா புரட்சியின் தந்தை பிடல் காஸ்ரோ மறைந்தார்
கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும் கம்பியூனி] புரட்சித் தலைவருமான பிடல் கஸ்ட்ரோ தனது 90ஆவது வயதில் காலமானார். ’’கியுபப் புரட்சியின் தலைமைத் தளபதி வெள்ளிக்கிழமை இரவு 10.29 (இந்திய இலங்கை நேரப்படி சனிக்கிழமை காலை 9 மணி) மணிக்கு காலமானார்’’, என்று அவரது சகோதரரும் கியுப அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்திருக்கிறார்.ஃபிடல் காஸ்ட்ரோ கியுபாவை சுமார் 50 ஆண்டுகளுக்கு ஒரு கட்சி அரசாக ஆண்டு வந்தார். அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ 2008ல்தான் அவருக்கு அடுத்த அதிபராகப் பதவியேற்றார்.மிகவும் சோகமான முகத்துடன் கியுபா அரச தொலைக்காட்சியில்…
மிகப்பெரும் தாக்குதலை முன்கூட்டியே முறியடித்த பிரான்ஸ்
அடுத்த வியாழக்கிழமை நூற்றுக்கணக்கான சிறார்கள் கொல்லப்பட்டிருப்பர், அதிஸ்டவசமாக பிரான்ஸ் படைகள் தடுத்துள்ளனர். பிரான்ஸ் தலைநகருக்குள் அல்லது அதனை ஒட்டிய பகுதியில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்த ஐ.எஸ். அமைப்பு திட்டமிட்டிருந்தனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நான்கு பேரும் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவரும் இராக்கில் உள்ள ஐ.எஸ் தளபதி ஒருவரிடமிருந்து சங்கேத மொபைல் செயலி வழியாக உத்தரவுகளை பெற்றுக்க்கொண்டிருந்ததாக அரச வழக்குரைஞர் பிரான்சுவா மோலின்ஸ் தெரிவித்துள்ளார்.ஸ்ட்ராஸ்பர்க் மற்றும் மார்ஸெய் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் தானியங்கி ஆயுதங்களின் குவியல் ஒன்றையும், அதனுடன் கூடுதலாக மதத்தின்…