கனடா நாட்டுக்கு செல்லும் இலங்கையர்கள் குறித்த நாட்டில் 90 நாட்கள் வரையில் விசா இன்றி சுற்றுலா அடிப்படையில் பிரவேசிக்க முடியும் என வெளியாகியிருந்த தகவல்களை நிராகரித்து கொழும்புக்கான கனேடிய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையிலிருந்து வர்த்தக நடவடிக்கைகளுக்காகவோ அல்லது சுற்றுலா பயணிகளாகவோ கனடாவுக்கு செல்லும் இலங்கையர்கள் தொடர்ந்தும் விசா அனுமதியைப் பெற வேண்டியது அவசியம். சட்டரீதியான விசா அனுமதியை பெற்ற நபர்களுக்கே கனடா நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி வழங்கப்படும்.
மேலும் இலங்கையிலிருந்து கனடாவுக்கு செல்லும் இலங்கையர்கள் குறித்த நாட்டில் 90 நாட்கள் வரையில் விசா இன்றி சுற்றுலா அடிப்படையில் பிரவேசிக்க முடியும் என வெளியாகியிருந்த தகவல்கள் அடிப்படையற்றவையாகும். நாட்டுக்கு வரும் சகலரும் சட்டரீதியான விசா அனுமதியை பெற்ற பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர். இலங்கையர்களுக்காக தமது நாட்டின் வீசா கொள்கையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை.
கனடாவுக்கு வருவதற்கு முன்னர் தமது நாட்டின் விசா குறித்த தெளிவுப்படுத்தல்களை பெற்றுக்கொள் ளுமாறு கனேடிய அரசாங்கம் கோரிக்கை விடுக்கின்றது.