இந்தியா

குமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி

இந்திய முன்னாள் இராணுவ வீரரும், இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவரும் இன்னாள் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங், ‘மிஷன் ஓவர்சீஸ்: டெயாரிங் ஒப்பரேஷன்ஸ் பை த இந்தியன் மிலிட்டரி’ என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவுக்கு வெளியே - பிற நாடுகளில் - இந்திய இராணுவம் நடத்திய இராணுவ நடவடிக்கைகள் குறித்த மிக முக்கிய சம்பவங்களின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது.இந்நூலில், 1988ஆம் ஆண்டு மாலைதீவில் இந்திய இராணுவம் சார்பாக நடத்தப்பட்ட ‘காக்டஸ்’ இராணுவ நடவடிக்கை, 2000ஆம் ஆண்டு சியரா லியோனில்…

சீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வணிகம் என்ற போர்வையில் தென்கிழக்கு ஆசியாவை ஆட்டிப்படைக்கும் சீனாவின் நடவடிக்கைகள் அமெரிக்காவை ஆத்திரமூட்டியுள்ளது. இதுபற்றி இந்தியாவை எச்சரித்துள்ளது அமெரிக்கா.கடந்த 2007ஆம் ஆண்டு முதல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இலங்கையில் சீனா தமது இராணுவ மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் சீனாவின் கடற்சார் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதை இந்தியாவிற்கு எச்சரிக்கும் வகையிலான கடிதம் ஒன்றை அமெரிக்காவின் வெளியுறவு துறை நிபுணரும், ஆசிய பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் தலைவருமான ஜெப். எம். ஸ்மித் எழுதியுள்ளார்.குறித்த கடிதத்தில், இலங்கையின் பெரும்பான்மையான துறைமுகங்களுக்கு உரித்துடையவர்களாக…

தமிழக பொலிசாரின் அராஜகம்: மனித உரிமை ஆணையகம் விசாரணை

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டமை, காவல் துறையினரே குடிசைகளுக்கு தீ வைத்தது, வாகனங்களை கொளுத்தியது போன்ற நிகழ்வுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கடந்த ஒரு வாரமாக, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டதால் பல இடங்களில் போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இருந்த போதும், மெரினாவில் போராட்டத்தில்…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரகுமான் உண்ணா நோன்பு

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தான் தமிழக உணர்வுக்கு ஆதரவாக நாளை (வெள்ளிக்கிழமை) உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று ஏ. ஆர். ரஹ்மான் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், ''தமிழகத்தின் உணர்வினை ஆதரிக்கும் விதமாக நான் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.கடந்த நான்கு நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் பல இளைஞர்கள், மாணவர்கள் , பெண்கள் போராடி வருகின்றனர்.பல திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும்…

60 குண்டுகள் முழங்க ராணுவ‌ மரியாதையுடன் ஜெ உடல் தகனம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழுடலுக்கு காலை முதல் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள், இந்திய குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராய் விஜயன், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிகார் முதல்வர் அகிலேஷ் யாவத் உள்ளிட்ட பல இந்திய அரசியல் தலைவர்களும் ஜெயலலிதாவிற்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.பிறகு ஜெயலலிதாவின் உடல் வைக்கப்படிருந்த ராஜாஜி அரங்கத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.இறுதியாக அவரின் உடலுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர்…

ஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சசிகலா, பன்னீர்ச்செல்வம் கதறல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள்,…

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…