இந்தியா
60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் ஜெ உடல் தகனம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழுடலுக்கு காலை முதல் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள், இந்திய குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராய் விஜயன், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிகார் முதல்வர் அகிலேஷ் யாவத் உள்ளிட்ட பல இந்திய அரசியல் தலைவர்களும் ஜெயலலிதாவிற்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.பிறகு ஜெயலலிதாவின் உடல் வைக்கப்படிருந்த ராஜாஜி அரங்கத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.இறுதியாக அவரின் உடலுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர்…
ஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சசிகலா, பன்னீர்ச்செல்வம் கதறல்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள்,…
ஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு (வயது 68) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். முதல்வர் ஜெயலலிதா காலமானார் செய்தியை அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மறைவு செய்தியைக் கேட்டு தமிழகமே பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் உறைந்துபோயுள்ளது.முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22-ந் தேதியன்று உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.நீர்ச் சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர்…
ஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன் மருத்துவர்கள்
சிகிச்சைக்கு ஜெயலலிதா நன்றாக ஒத்துழைப்பு அளித்த வந்த போதிலும் அவரின் நிலைமை மிகவும்கவலைக்கிடமாக மாறிவிட்டது என ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வந்த லண்டன் மருத்துவர் ரிச்சட் பீல் தெரிவித்துள்ளார்."நேற்று ஜெயலலிதா திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட செய்தி கேட்டு நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்; அவரை அப்போலோ மருத்துவமனையுடன் சேர்ந்து நானும் அவரின் உடல்நிலையை கவனித்து வந்தேன்; அவர் சிகிச்சை தக்க எதிர்வினை தந்தது எனக்கு ஊக்கமளிப்பதாகவே இருந்தது; அவர் நன்றாக முன்னேறி வந்தார்.ஆனால் நிலைமை மிக மிக மோசமானதாக மாறிவிட்டது. எனினும் முடிந்தவரை அவர்…
ஜெயலலிதா மிகவும் கவலைக்கிடம் : அப்பலோ
தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், நேற்று திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், இ.சி.எம்.ஓ. (Extra corporeal Membrane Oxygenation) மற்றும் பிற உயிர் பாதுகாப்பு ஆதரவு துணையுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ.சி.எம்.ஓ. என்பது, இதயம் மற்றும் நுரையீரல் அவையங்கள் முழுமையாக…
மகனின் கனவு நனவாக போராடிய ஏழைத்தாய்
மகன் அடையவிருக்கும் வெற்றிக்கான பயணச் செலவாக, வெறும் பத்து ரூபாயை மட்டும் தர முடிந்த சரோஜா தனித்து வாழும் ஒரு சாதனைப் பெண். அவர்தான் கனவுக்காக வாழ்க்கையில் போராடிய ஏழைத்தாய் சரோஜா.''திருமண வாழ்க்கையில் சந்தித்த தோல்வி என்னைத் தனித்து வாழும் பெண்ணாக மாற்றியது. ஒலிம்பிக்ஸ் போட்டி பற்றி எனக்கு தெரியாது. ஆனால் என் மகன் உலக அளவில் பாராட்டு பெற வேண்டும் என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்ததில்லை. எனது மகன் பாரலிம்பிக்ஸ் போட்டிக்காகச் சென்றது எங்கள் ஊரில் பலருக்கும் தெரியாது.தொலைக்காட்சியில் மாரியப்பன் தங்கம் வென்றதைப்…