தேசிய நினைவெழுச்சி நாள்
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வே தேவை: உருத்திரகுமாரன்
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஏற்பாடு ஒன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமைய முடியும்! அதற்கென உழைப்பதையே மாவீரர்கள் கனவை நனவாக்கும் எமது அறமாக ஏற்கும் உறுதி எடுப்போம்! இன்று மாவீரர் நாள். தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் தம் உயிரை ஆகுதியாக்கிய நமது மாவீரர்களை நாம் எமது இதயக்கோவிலில் வைத்துப் பூசிக்கும் நாள். மாவீரர்கள் நமது மக்களின் விடுதலைக்காய் களமாடினார்கள். நெருப்பாற்றைத் தாண்டினார்கள். புயலை வாயால் ஊதிக் கடந்தார்கள். காற்றுப் போகமுடியா வெளியில் கூடப் புகுந்து பகை அழித்தார்கள். அவர்கள் மண்ணில் வீழும் போதெல்லாம்…