முன்னாள் சிங்கள இராணுவ தளபதிகள் ஐந்து பேருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையில் மஹிந்த மைத்திரி ஆகியோரின் தலையீடுகள் அதிகரித்துள்ளன. இந்த சூழலில் இதுவரை நடைபெற்ற விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் வழங்கப்படவுள்ளது.
இந்த தளபதிகள் மீது பெருமளவான போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருந்தபோதும் அவற்றை புறந்தள்ளிவிட்டு நிதிக்குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே விசாரணைப் பிரிவு மற்றும் இரகசியப் பொலிஸ் திணை க்களம் என்பன விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
முன்னாள் கடற்படைத் தளபதிகளான திசர சமரசிங்க, வசந்த கரன்னாகொட, ஜயநாத் கொலம்பகே, ஜயந்த பெரேரா மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஆகியோர் இவ்வாறு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசியல் நடவடிக்கைகளுடன் தொடர்புபடல், எவன்கார்ட் நிறுவனத்துக்கு உதவுதல், 5 மாணவர்களுடைய காணாமல் போதல், இராணுவ படையின் நலன்புரி விடயங்களுக்கு டெலிகொம் நிறுவனத்திடம் 50 மில்லியன் ரூபா பெற்றுக் கொண்டமை போன்ற விடயங்கள் தொடர்பில் இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க வந்த ஒரு பாதுகாப்புப் பிரிவு அதிகாரி, முன்னாள் பாதுகாப்பு பிரதா னிக்கு 3 லட்சம் ரூபா பெறுமதியான டொலெக்ஸ் சுவிஸ் கைக்கடிகாரம் ஒன்றை வழங்கியுள்ளமை தொடர்பிலான தகவலும் வெளியாகியுள்ளது.
குறித்த பாதுகாப்புத்துறை பிரதானிக்கு எதிராக பாதுகாப்புத் துறை அதிகாரி இரகசியப் பொலிஸாரிடம் வாக்கு மூலம் வழங்கி யுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் இராணுவத் தளபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்குப் பின்னால் முன்னாள் பாதுகாப்பு பிரதானியொருவர் காண ப்படுவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
வாக்கு மூலம் பெறப்பட்ட முன்னாள் பாதுகாப்பு பிரதானி தொடர்பில், சட்ட மா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.