யழ்ப்பாணத்தில் மீண்டும் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.
செவ்வாய்க் கிழமை இரவு 8 மணியளவில் அந்திராணி வாய்க்கால் வீதியில் இளைஞர்கள் மூவர் துவிச்சக்கர வண்டியில் வேலை முடித்து வீடு திரு ம்பிக்கொண்டிருந்தபோது, இலக்கத்தகடுகளை கறுப்பு துணியினால் மறைத்திருந்ததுடன், முகங்க ளை யும் கறுப்புத் துணிகளால் மூடி தலைக்கவசம் அணிந்திருந்த நிலையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர், குறித்த இளைஞர்கள் மீது கைக்கோடரி போன்ற ஆயுதம் ஒன்றினால் தாக்குதல் நடாத்தி யிருந்தனர்.
இதன்போது இளைஞர்களில் இருவர் காயமடைந்த நிலையில் நிலத்தில் விழுந்ததனைத் தொடர்ந்து, மற்றைய இளைஞனை உதைந்து விழுத்திய வாள்வெட்டுக் குழுவினர் அவர் வைத்திருந்த கையடக்கத் தொலைபேசியை அபகரித்துச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை வீதியால் சென்ற வாள்வெட்டுக்குழுவினர், சங்கரத்தை பகுதியில் வீதியால் செல்பவர்களை நோக்கி வாளை விசுக்கியவாறு சென்றிருந்ததாகவும் எனினும் எவரும் வாள்வெ ட்டுக்கு இலக்காகவில்லை எனவும் அப் பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
அந்திரானி வாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சித்தங்கேணி சந்தியில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு தகவல் வழங்கிய போது, குறித்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாட்டை மேற்கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தொலைபேசி மூலம் இச் சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்திய நிலையிலேயே வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.