கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி தீ விபத்தினால் எரிந்த கிளிநொச்சிப் பொதுச் சந்தையினை மறுநாள் பதினேழாம் திகதி வந்து பார்வையிட்ட வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகவிரைவில் குறித்த சந்தையினை மீண்டும் இயங்க வைப்பதற்கு தற்காலிகக் கடைகளை அமைப்பதற்கு ஆவன செய்வதாகக் கூறிச்சென்றதன் பிரகாரமும் கரைச்சிப் பிரதேச சபையினரால் வழங்கப்பட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலும் தீவிபத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிப் பொதுச் சந்தை வர்த்தகர்களுக்கு தற்காலிகக் கடைகளை அமைப்பதற்கு செப்டம்பர் மாதம் இருபத்தி மூன்றாம் திகதி ஒன்பது மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட ஒன்பது மில்லியனைக் கொண்டு நாற்ப்பத்தி ஐந்து தற்காலிக கடைகள் கரச்சிப் பிரதேச சபையினரால் அமைக்கப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் வடமாகாண முதமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் , பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் , வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை , அரியரத்தினம் ,தவநாதன் , கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் , உள்ளுராச்சி திணைக்கள உத்தியோகத்தர்கள் ,கரச்சிப் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.