கிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்

கிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்






பெளத்த மதத்திற்கு முன்னுரிமை ஏன்?

அரசியல் கைதியாக நீண்டகாலம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விவேகா னந்தநகர் கிளிநொச்சியைச் சேர்ந்த விவேகானந்தனூர் சதீஸ் என அழைக்கப்படும் செல்லையா சதீஸ்கு மார் எழுதிய விடியலைத்தேடும் இரவுகள் கவிதை நூல் வெளியீட்டுவிழா நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச்சபை மண்டபத்தில் மாணிக்கம் ஜெகன் தலைமையில் நடைபெற்றுறது.

இதில் பங்குபற்றிய சுமந்திரன் எம்.பி. அரச உத்தியோகத்தரை தகாத வார்த்தைகளால் தூசித்த மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதிக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் தொடர்ந்தும் உண்மையாகச் செயற்பட வேண்டுமாயின், இவ்வாறான சம்பவங்களை அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கேட்டு க்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி கெட்ட வார்த்தைகளால் தமிழ் அரச உத்தி யோக த்தரை திட்டித்தீர்த்து, பெண் பொலிஸ் உத்தியோகத்தரை துரத்தி அடித்து, செயற்பட்டமை காணொளிகள் மூலம் வெளியாகியுள்ளதாகவும் இது பகிரங்கமாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என்றும் குறிப்பிட்டு ள்ளார்.

குறித்த பௌத்த பிக்குவுக்கு எதிராக அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றும் எம்.ஏ. சுமந்திரன், வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவில் பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென யாராவது கூறுவார்களாயின், மங்களராமய விகாராதிபதியின் காணொளியை காண்பித்து, அதனை கேள்விக்கு உட்படுத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.


இவ்வாறான பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளுக்காகவா பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டு ம் என்று தான் கேட்கவுள்ளதாகவும் பேச வேண்டிய இடங்களில் சரியானதை பேசுவோம் என்றும் ஒத்து ழைக்க வேண்டிய இடங்களிலேயே சேர்ந்து ஒத்துழைப்போம் என்றும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்து ள்ளார்.

கிளினொச்சியில் மீழமைக்கப்பட்ட சந்தை திறப்பு

கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி தீ விபத்தினால் எரிந்த கிளிநொச்சிப் பொதுச் சந்தையினை மறுநாள் பதினேழாம் திகதி வந்து பார்வையிட்ட வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகவிரைவில் குறித்த சந்தையினை மீண்டும் இயங்க வைப்பதற்கு தற்காலிகக் கடைகளை அமைப்பதற்கு ஆவன செய்வதாகக் கூறிச்சென்றதன் பிரகாரமும் கரைச்சிப் பிரதேச சபையினரால் வழங்கப்பட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலும் தீவிபத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிப் பொதுச் சந்தை வர்த்தகர்களுக்கு தற்காலிகக் கடைகளை அமைப்பதற்கு செப்டம்பர் மாதம் இருபத்தி மூன்றாம் திகதி ஒன்பது மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட ஒன்பது மில்லியனைக் கொண்டு நாற்ப்பத்தி ஐந்து தற்காலிக கடைகள் கரச்சிப் பிரதேச சபையினரால் அமைக்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் வடமாகாண முதமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் , பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் , வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை , அரியரத்தினம் ,தவநாதன் , கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் , உள்ளுராச்சி திணைக்கள உத்தியோகத்தர்கள் ,கரச்சிப் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

வன்னியில் இருந்து கடத்தப்படும் மரக்குற்றிகள்

வன்னிப்பிரதேசத்தில் இருந்து களவாக தென் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருந்த ஒருதொகை பெறுமதிமிக்க மரக்குற்றிகள் கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மரக்குற்றிகளை வன்னேரிக்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று கொண்டு செல்லப்பட்ட வேளையிலேயே அவை பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மரக்குற்றிகளை ஏற்றிசென்ற பார ஊர்தி பொலிஸாரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

கிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு

முற்றாக சிதைந்த நிலையில் அடையாளம் காணமுடியாத அளவிற்கு உருக்குலைந்த நிலையில் கிளிநொச்சி – உருத்திரபுரம் வடக்கு நீவில் பிரதேச காட்டுப்பகுதியில், சடலமொன்று இன்று (வியாழக்கிழமை) மீட்கப்ப ட்டுள்ளது.

சடலத்தை கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் பார்வையிட்டுள்ளதோடு, கிளிநொச்சி மாவட்ட நீதவான் பார்வையிட்டதன் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வை க்கப்படவுள்ளது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

யாழ், கிளி மாவட்டங்களில் படையினர் குவிப்பு; மக்கள் அச்சத்தில்

ஆயுதம் தாங்கிய விசேட சிங்கள அதிரடிப்படையினரால் யாழ் குடா நாடு முற்றுகைக்கு உள்ளாக்கப்படுகின்றது,. பல்கலைக்கழக மாணவர்கள் சிங்களப்பொலிசாரின் துப்பாக்கி சுட்டிற்கு பலியான சம்பவத்தை காரமம் காட்டி இந்த படைக்குவிப்பு இடம்பெறுகின்றது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மாவட்டத்தில் சாதாரண காவல்துறையினர் எவரும் வீதிக் கடமைகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட்டு விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழ். நகரப் பகுதி மற்றும் நகருக்கு வெளியேயும் விசேட அதிரடிப் படையினர் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவகின்றனர்.

அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பொது மக்கள் - பொலிஸாருக்கு இடையே ஏற்பட்ட முறுகலை அடுத்து கிளிநொச்சியிலும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு போக்குவரத்து பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் இருவர் குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தனர். இச் சம்பவத்தைக் கண்டித்து வடமாகாணம் தழுவிய பூரண ஹர்த்தால் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.மாணவர்களுக்கு சார்பாக போராட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

கிளினொச்சியில் மக்கள் மீது சிங்கள காவல்துறை தாக்குதல்

வடக்கில் பூரண கதவடைப்பு இடம்பெற்றபோதும் சிங்கள அரச சார்பற்ற, கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமைபோன்று இட ம்பெற்று வந்தது இந்தநிலையில் குறித்த தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப் போவதாக வதந்தி பரவியது

இதனையடுத்து கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பொலி ஸாரும் விசேட அதிரடிப் படையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டதை அடுத்து அங்கு பத ற்ற நிலைமை உருவாகியது.

இதனையடுத்து பொலிசாருக்கும், பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முறுகல் தற்போது மோதலாக மாறியுள்ளது. இதனால் கிளிநொச்சி நகரில் பெரும்பதற்றம் ஏற்பட்டு ள்ளது.

இதனையடுத்து அங்கு வந்த கலகம் அடக்கும் பொலிசார் உட்பட படையினர் மக்களை அங்கி ருந்து வெளியேறுமாறு பணித்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்ப ட்டது.

இந்தநிலையில் பொலிசார் மீது மக்கள் கற்களையும், கையில் கிடைத்த அனைத்தையும் கொண்டு தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.

இதனையடுத்து படையினரும் மக்கள் மீது தடியடிப்பிரயோகம் நடத்தியதுடன், கையில் வைத்திருந்த துப்பாக்கிகளையும் கொண்டு தாக்குதல் நடத்திவருகின்றனர். இதனால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் டிப்போ சந்திக்கும் இடையேயான பகுதி யுத்தகளமாக காட்சி அளிக்கிறது.

இதேவேளை வீதியின் நடுவே டயர்களை கொளுத்தி பொது மக்கள் படையினருக்கு எதிராக போராட்டங்களை தொடர்கின்றனர். இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவுவதுடன் அதிகளவான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை வரவில்லை

சிங்கள காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான .பல்கலைக்கழக மாணவர்களின் சம்பவத்திற்கு நீதி கோரி யாழ் செயலகம் மற்றும் வடமாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் தங்போது ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தஒ போராட்டத்திற்கு காவல்துறையினர் கடமைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…