அரசியல் கைதியாக நீண்டகாலம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விவேகா னந்தநகர் கிளிநொச்சியைச் சேர்ந்த விவேகானந்தனூர் சதீஸ் என அழைக்கப்படும் செல்லையா சதீஸ்கு மார் எழுதிய விடியலைத்தேடும் இரவுகள் கவிதை நூல் வெளியீட்டுவிழா நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச்சபை மண்டபத்தில் மாணிக்கம் ஜெகன் தலைமையில் நடைபெற்றுறது.
இதில் பங்குபற்றிய சுமந்திரன் எம்.பி. அரச உத்தியோகத்தரை தகாத வார்த்தைகளால் தூசித்த மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதிக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் தொடர்ந்தும் உண்மையாகச் செயற்பட வேண்டுமாயின், இவ்வாறான சம்பவங்களை அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கேட்டு க்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி கெட்ட வார்த்தைகளால் தமிழ் அரச உத்தி யோக த்தரை திட்டித்தீர்த்து, பெண் பொலிஸ் உத்தியோகத்தரை துரத்தி அடித்து, செயற்பட்டமை காணொளிகள் மூலம் வெளியாகியுள்ளதாகவும் இது பகிரங்கமாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என்றும் குறிப்பிட்டு ள்ளார்.
குறித்த பௌத்த பிக்குவுக்கு எதிராக அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றும் எம்.ஏ. சுமந்திரன், வலியுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவில் பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென யாராவது கூறுவார்களாயின், மங்களராமய விகாராதிபதியின் காணொளியை காண்பித்து, அதனை கேள்விக்கு உட்படுத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளுக்காகவா பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டு ம் என்று தான் கேட்கவுள்ளதாகவும் பேச வேண்டிய இடங்களில் சரியானதை பேசுவோம் என்றும் ஒத்து ழைக்க வேண்டிய இடங்களிலேயே சேர்ந்து ஒத்துழைப்போம் என்றும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்து ள்ளார்.