உலகம்
ஆபிரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என அச்சம்
கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.அதிகபட்சமாக இத்தாலியில் 18,849 பேர் இறந்துள்ளனர்; அமெரிக்காவில் 18,637 பேர் இறந்துள்ளனர்.இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இறப்பு மற்றும் தொற்றுக்கள் குறைவடையத்தொடங்கியுள்ளன. இதே வேளை அமெரிக்கா இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தற்போது இறப்பு வீதம் குறையும் நிலையில் இல்லை என்பதனை அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் கூறிவருகின்றனர்.ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா இலங்கை ஆகிய நாடுகளில் பரவும் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.இதே நேரம் ஆபிரிக்காவில்…
தற்போதைய உத்திகளை நிறுத்தினால் உலகம் பேரிடரை சந்திக்கும்
அவசரப்பட்டு சமூக இடைவெளி உத்தியையோ அல்லது ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்தினால், உலகம் மீண்டும் மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பொருளாதார தாக்கம் இருக்கும் என்றாலும், ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்துவது குறித்து நிதானமாக செயல்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றாலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஜெனீவாவில்…
டொனால்ட் ட்ரம்ப், கானுடன் மீண்டும் வம்பு
லண்டன் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, அந்த நகர மக்களுக்கு மேயர் சாதிக் கான் அளித்த உத்தரவாதம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மோதியுள்ளார்.லண்டன் தெருக்களில் அதிக போலீஸார் காவல் பணியில் ஈடுபடுவர். அதனை கண்டு மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மேயர் சாதிக் கான் தெரிவித்திருந்தார்.ஆனால், தாக்குதல் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடுவதாக ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டிய அதிபர் டிரம்ப், லண்டன் மேயரின் விளக்கம் "பரிதாபமான சாக்குப்போக்கு" என்று திங்கள்கிழமை தெரிவித்திருக்கிறார்.சனிக்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் காயமடைந்தனர்.இந்த…
அமெரிக்க உளவுப்பிரிவின் மடிக்கணனி திருட்டு
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளின்டன் தொடர்பாக முக்கிய தகவல்களை கொண்ட அமெரிக்க உளவுப் பிரிவின் மடிக்கணினி (லேப்டாப்)திருடப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.டிரம்ப் டவர் மற்றும் கிளின்டன் தனது சொந்த ஈமெயில் சர்வரை பயன்படுத்தியது தொடர்பாக புலனாய்வு செய்ததது தொடர்பான தகவல்கள் அந்த கணினியில் உள்ளதாக கூறப்படுகிறது.வியாழனன்று நியூயார்க்கின் ப்ரூக்ளின் மாவட்டத்தில் ஒரு முகவரின் காரில் இருந்து அது எடுக்கப்பட்டது என அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.சிசிடிவி பதிவை கொண்டு திருடியவர்களை அடையாளம் காண காவல் துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.பாதுகாப்பு அமைப்பால் வழங்கப்பட்ட…
திருநங்கைகளை சாக்கினுள் கட்டி அடித்துக்கொலை
பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் இருவர், சவுதி அரேபிய சிறைச்சாலையில் பொலிஸார் கண்முன்னே சாக்கில் கட்டிவைத்து தடிகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெண்களின் ஆடைகளை ஆண்கள் அணிந்துகொள்வது சவுதி அரேபியாவில் சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் சிலர், சவுதி அரேபிய தலைநகரான ரியாதுக்குச் சென்றுள்ளனர். அங்கே பொது இடங்களில் பெண்களின் உடைகளை அணிந்தபடி இவர்கள் வலம் வந்துள்ளனர்.இதுபற்றிக் கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் 33 திருநங்கைகள் கைதாகினர். இவர்களை சிறைச்சாலைக்குக் கொண்டு சென்ற பொலிஸார்,…
கனடா இளைஞர் பிரித்தானியாவில் படுகொலை
கனடாவில் இருந்து வருகைத்தந்த தமிழர் ஒருவர் பிரித்தானியாவில் கிரேட் லின்ஃபோர்டு பகுதியில் வைத்து படுகொலை செய்ய ப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.32 வயதான சுரேன் சிவானந்தன் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது உறவினர்களால் அடையாளம் காட்டியுள்ளனர்.இந்நிலையில், குறித்த படுகொலை வழக்கு தொடர்பில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதில் 37 வயதான ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.அத்துடன், கிரோராஜ் யோகராஜா (30) என்பவரும் கைது செய்யப்பட்டுள விசாரிக்கப்பட்டு வருகின்றார். கைது செய்யப்பட்டுள்ள நபர்களை இன்றைய…