உலகம்
ஆஸி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம்!
பசிபிக் தீவுகளில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் தடுப்பு மையங்களில் உள்ள அகதிகள், அமெரிக்காவில் மீள் குடியேற்றப்படுவார்கள் என ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டார்ன்புல் அறிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டார்ன்புல்ஏற்கனவே தனது அகதிகள் பரிசீலனை மையங்களில் உள்ள அகதிகளுக்கு மட்டுமே பொருந்தும் "ஒரு முறை ஒப்பந்தம்" என டார்ன்புல் இதனை விவரித்துள்ளார்.அகதிகள் எண்ணிக்கை குறித்தும், எப்போது நடைபெறும் என்ற கால அட்டவணை குறித்தும் அவர் குறிப்பிடவில்லை.பப்புவா நியு கினியா மற்றும் நவ்ருவில் இருக்கும் ஆஸ்திரேலிய முகாம்களில் உள்ள அகதிகள், இந்த மீள்குடியேற்ற ஒப்பந்தம் குறித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.மனித…
எனது தோல்விக்கு FBI இயக்குனரே காரணம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது அதிர்ச்சிகரமான தோல்விக்கு, எஃப் பி ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமியின் மீது ஹிலரி குற்றம் சுமத்தியுள்ளார்.தனது மின்னஞ்சல் பயன்பாடு குறித்து தேர்தலுக்கு சற்று முன்னதாக வந்த கோமியின் புதிய விசாரணை அறிவிப்பு, தனது பிரச்சாரத்தின் வேகத்தை குறைத்தது விட்டது என கட்சியின் நிதி வழங்கியவர்களிடம் ஹிலரி தெரிவித்துள்ளார்.டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் நான்காவது நாளாக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.நியூயார்க்கில் உள்ள யூனியன் சதுக்கத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலிஸார் தடுத்து நிறுத்தினர்;டிரம்ப் எதிர்ப்பாளர்கள்அந்நகரில், டிரம்ப்…
வென்றார் டொனால்ட் ட்ரும்ப்
ஹிலரி கிளிண்டனை அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியடைச் செய்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராகி உள்ளார் என்று ஏபி செய்தி முகமை தகவல்கள் தெரிவித்துள்ளன.பல மாதங்களாக நடந்த பிரச்சாரத்தில் ஹிலரிக்கு ஆதரவாக தென்பட்ட பல முக்கிய ஊசல் நிலை மாநிலங்களில் பலவற்றை வென்றதன் மூலம் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி உறுதியானது.ஃபுளோரிடா, ஒஹையோ, வடக்கு கரோலினா போன்ற கடும் போட்டி இருந்த மாநிலங்களில் பெற்ற வெற்றி டொனால்ட் டிரம்ப்பின் வெற்றியை சாத்தியமாக்கியது.
ட்ரம்ப் முன்னிலையில், ஹிலாரி ஆதரவாளர்கள் சோகத்தில்
தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பல கணிப்புகளையும் விட சிறப்பான முறையில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.ஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு வேட்பளர்களுக்கும் இடையிலான ஆதரவில் ஊசல் நிலையில் உள்ள முக்கிய மாநிலங்களான ஃ புளோரிடா மற்றும் ஒஹையோ ஆகிய மாநிலங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறும் நிலையில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தேர்தல்துவங்கியது, முடிவுகள் நாளையில் இருந்து..
அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க உள்ள அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.அமெரிக்காவில் உள்ள அனைத்து 50 மாநிலங்களும், நிர்வாகத் தலைநகரான வாஷிங்டன் டிசி பகுதியும், ஆறு வெவ்வேறு நேர மண்டலங்களில் தங்கள் வாக்குப்பதிவை செலுத்தவுள்ளன.நாட்டின் மேற்கு கடற்கரை பகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு ஐந்து மணி நேரத்துக்கு முன்பாக, கடும் போட்டி நிலவும் முக்கிய மாநிலங்களான வர்ஜினியா மற்றும் ஜார்ஜியா ஆகியவற்றில் நள்ளிரவில் (ஜிஎம்டி நேரப்படி) முதல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடும் போட்டி நிலவும் சில முக்கியமான…
டொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு
அமெரிக்க அதிபர் தேர்வுக்கான வேட்பளாரான டொனால்ட் ட்ரும்ப் உரையாற்றிக் கொண்டிருந்த போது கூட்டத்தினருக்கு மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதுகூட்டத்தினருக்கு மத்தியில் சலசலப்பு ஏற்பட்டவுடன் அங்கிருந்து உடனே வெளியேற்றப்பட்டார் ட்ரம்ப்; எனினும் சிறிது நேரம் கழித்து தனது உரையை முடிப்பதற்காக திரும்ப வந்தார் ட்ரம்ப்.தேர்தல் பிரசாரத்தில், நெவாடாவில் நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட பாதுகாப்பு சர்ச்சைக்கு பிறகு தனது ரகசிய சேவை பாதுகாவலர்களால் மேடையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டார் டொனால்ட் ட்ரம்ப்.போலிஸாரால் இது குறித்து ஒருவர் சிறிது நேரம் கைது செய்யப்பட்டார்; ஆனால் அவரிடம்…