மஹிந்தவிடம் இருந்து நாட்டைமிட்ட சந்திரிக்கா சிலகாலம் ஒதுங்கி இருந்தார் ஆனால் இப்போ மீண்டும் மஹிந்தவின் அடாவடிகள் அதிகரித்துள்ள நிலையில் சந்திரிக்கா களம் இறங்கவுள்ளார்.முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகளை விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பில் ஜனாதிபதி காரசாரமான முறையில் கருத்து வெளியிட்டதால், நல்லாட்சியில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.
மைத்திரி- ரணில் ஆட்சியில் ஏற்கனவே சுதந்திரக் கட்சி -ஐ.தே.க வின் சில உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில், கோட்டா குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்தானது இருதரப்பு முரண்பாட்டின் உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, நிதிக்குற்ற விசாரணை பிரிவு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளிட்ட விசாரணை குழுக்கள் அரசியல் நோக்கம் கருதி செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இதன் வெளிப்பாடாக, தற்போது அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் கீழுள்ள பொலிஸ் திணைக்களம் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், விடுமுறையின் நிமித்தம் தற்போது லண்டனில் தங்கியுள்ள சந்திரிகா தேசிய அரசிற்குள் எழுந்துள்ள பிரச்சினையை தீர்ப்பதற்காக நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.