மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறி பத்திர முறைகேடு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.12 மணியளவில் சிங்கப்பூர் செல்லும் ஈ.கே.348 விமா னத்தில் அவர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கோப் குழு தலைவரும் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி சமர்ப்பிக்கவுள்ள அறிக்கைக்கு மாற்றீடாக மற்றுமொரு அறிக்கையை சமர்ப்பிக்க ஐக்கிய தேசிய கட்சி முன்னர் திட்டமிட்டிருந்தது.
எனினும் பிணை முறிப் பத்திர மோசடியில் இருந்து அர்ஜுன மகேந்திரனை பாதுகாக்கும் வகையிலேயே ஐக்கிய தேசிய கட்சி, வேறு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க முயல்வதாக சுனில் ஹந்துன்நெத்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் ஏகமனதான கோப் அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கோப் குழுவிலுள்ள ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் பின்னர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே அர்ஜுன மகேந்திரன் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. அர்ஜுன மகேந்திரன் சிங்கபூர் பிரஜை என்பதும் குறிப்பிடத்தக்கது