களுத்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினர் சமயான் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று திங்கள்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் இரு சிறைச்சாலை அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மூன்று அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான பாதள உலக குழு தலைவர் என கூறப்படும் அருண உதயசாந்த என்ற விளக்கமறியல் கைதியை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகனமொன்றில் வந்த குழுவொன்று இந்த துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.      
      
        
      
         
			 
               
                      
        
 
                                 
                                 
                                 
                                