தாயகம்
கிளியில் காணிகள் சில விடுவிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்கள் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலாரிடம் இராணுவத்தால் கையளிக்கப்பட்டன. கரைச்சி, கண்டாவளைப் பகுதிகளில் உள்ள தனியாரின் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்களை இனங்கண்டு காணிகளைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கைகள் பிரதேச செயலர்கள் ஊடாக நடைபெறும் என்று மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்
சட்டவிரோதை மருத்துவமனை சுற்றிவளைப்பு
வவுனியாவில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத தனியார் மருத்துவமனை ஒன்று இன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அங்கிருந்த மருந்து வகைகளும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை எமது திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை. மருந்துவகைகள் எவ்வாறானவை எனத் தெரியவில்லை. மருந்துகள் அனைத்தும் நீதிமன்றில் ஒப்படைக்கப்படும். மருந்துகள் சோதனைக்காக அனுப்பப்படும் என்று வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் குறிப்பிட்டார். இந்த வைத்தியசாலை ஹோமியோபதி சிகிச்சைகளை வழங்குகின்றது. மாத்தளையில் இருந்து வவுனியா வந்து சிகிச்சை வழங்கப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டது.
காணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு
காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவினர்களுடன் இரு சட்டத்தரணிகள் மற்றும் இரு அருட்தந்தையர்களும் இணைந்தே அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கவுள்ளனர். இந்தச் சந்திப்பு இன்று மாலை 4 மணிக்கு, வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டி ருந்தபோதும், திடீரென அது மாலை 4 மணிக்கு பிற்போடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு திடீர்ப் பயணமாக இன்று வருகை தரும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவினர்களுடன் சந்திப்பு…
வடக்கு கல்வியமைச்சர் இராஜினாமா
வடமாகாண சபையின் கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராசா, தனது இராஜினாமாக் கடிதத்தை, கட்சித் தலைமையிடம் இன்றுக் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.தனக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரையில், தான் அப்பதவியை இராஜினாமா செய்யப்போவதாக, அவரது இராஜினாமாக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவிக்கின்றது.வடமாகாண அமைச்சர்களான தம்பிராஜா குருகுலராசா மற்றும் பொ.ஐங்கரநேசன் ஆகியோருக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை, வடமாகாண சபையில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள்…
கிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்
கிளிநொச்சி - கல்லாறு பகுதியில் ஆயுதமுனையில் நாற்பது பவுண் நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த கொள்ளைச் சம்பவம் கல்லாறு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.கல்லாறு பகுதியில் உள்ள தனியார் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து உட்சென்ற கொள்ளைக் குழு ஒன்று அங்கிருந்த கடை உரிமையாளர் மற்றும் அங்கு தங்கியிருந்த நபர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.அங்கு இருந்த பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட குழுவினர், கடை உரிமையாளரை அவரது வீட்டிற்கு ஆயுத முனையில் அச்சுறுத்தியவாறு…