தாயகம்
காணி அபகரிப்பு ஓர் அரச பயங்கரவாதம்: மனோ கணேசன் தாக்கு
வடக்கில் ஆவா குழுவை இப்போது இராணுவம் நடத்துவதாக அமைச்சர் ராஜித சொன்னதாக நான் நினைக்கவில்லை. ஆனால், அதற்கு அன்று பிள்ளையார் சுழி போட்டு, முடுக்கி விட்டவர் கோத்தாபய ராஜபக்ச என்றுதான் ராஜித சொன்னார். அதேபோல் முதல்வர் விக்கி, இன்று இராணுவம், படையணி தொழிலுக்கு தொடர்பில்லாத வேலையை செய்கிறது என்று சொன்னது பிழை யல்ல. அவை உண்மை.புலிகளின் செயற்பாடு பயங்கரவாதம் என்றால், காணி பிடிப்பது, பிடித்த காணிகளை விட மறுப்பது என்பவை அரச பயங்கரவாதம் இல்லையா? இது எப்படி ஆளுநருக்கு தெரியாமல் போனது?அன்று, கொழும்பில் பல…
கடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை
அரச சார்பற்ற அமைப்பு ஒன்றிடம் இருந்து கடனைப்பெற்ற மீழ்குடியேற்ற இளந்தாய் ஒருவர் கடனை மீழ செலுத்தமுடியாத காரணத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளத்தைச் சேர்ந்த இந்த தாய் தனது ஆண் குழந்தையுடன் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.நேற்று புதன்கிழமை வீட்டைவிட்டு தனது இரண்டாவது ஆண்குழந்தையுடன் வெளியில் சென்ற இந்தப் பெண் வீடு திரும்பாததையடுத்து, அவருடைய கணவனும் உறவினர்களும் தேடியபோது இன்று காலை அவர் கிணற்றில் குழந்தையுடன் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டிருக்கின்றது.அயல் கிராமமாகிய பன்றிக்கெய்தகுளத்தில் பாவனையற்ற கிணறு…
சட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு
அம்பாறையில் இறக்ககாமம் பகுதியில் மாணிக்கமடு கிராமத்தின் அருகே, மாய க்கல்லி மலை மீது அத்துமீறி வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.கடந்த சனிக்கிழமை திடீரென வந்த பௌத்த பிக்குகளைக் கொண்ட ஒரு குழுவினரால், தமிழ்க்கிராமமான மாணிக்கமடுவை அடு த்த மாயக்கல்லி மலை மீது புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது.அந்தப் பகுதியில் பௌத்தர்கள் எவரும் வசிக்காத நிலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டமையானது அந்தப்பகுதியில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களிடையே அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தியது.இதுகுறித்து, அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குத் தெரியப்படுத்தப்பட்டதுடன் அவர் அப்பகுதிக்கு…
மாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது- ஆசிரியர்கள் அறிக்கை
கடந்த 20ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக முன்றாம் வருட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது மாணவர்கள் மத்தியில் பல எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. இந்த படுகொலைகள் தொடர்பில் மாணவர்கள் ஜனநாயக வழிப் போராட்டங்களுக்கூடாக மட்டுமே தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இவ்வாறு யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட ஆசிரியர் விஜயகுமார் தெரிவித்தார்.இன்று புதன்கிழமை யாழ் பல்கலையில் நடைபெற்ற விசேட பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே மேற்க்கண்டவாறு தெரிவித்தார். குறித்த படுகொலை சம்பவத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளார். மற்றைய மாணவனின் மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது. ஆயினும் மாணவர்கள் அதை…
வாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே வடக்கின் நிலை
எமது இளம் தலைமுறையில், பலரின் நடவடிக்கைகள் எமக்கு மிகுந்த மனவேதனையைத் தருவதாக அமைகின்றது. வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் ஒரு பண்பான, படித்த சமூகம் என்ற சிறப்புப் பெயரை கொண்டிருந்தது. ஆனால் அந்த சமூகம் இன்று பல வழிகளிலும் சீரழிக்கப்பட்டு வருகின்றது என்பதே உண்மை. வாள் வெட்டுக் கலாச்சாரம், போதைப்பொருள் கலாச்சாரம் பாலியல் முறைகேடுகள் என பல்வேறு வழிகளில் எமது வாழ்வியல் பண்பாடுகள் சீரழிக்கப்படுகின்றன. இவை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாதவை. இவற்றின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்று தெரிந்தும் நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.கரைத்துறைப்பற்றுப்…
கடத்திவரப்பட்ட 75 கிலோ கஞ்சா பிடிபட்டது
இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 75 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள், காரைநகர் கட ற்பரப்பில் கைப்பற்றப்பட்டதுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.படகில் நேற்று (திங்கட்கிழமை) மாலை கடத்திவரப்பட்ட குறித்த கஞ்சா போதைப்பொருள், காரைநகரிலிருந்து மன்னாருக்கு கட த்திச் செல்லப்படவிருந்தநிலையில் , விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.வேலணை, மன்னார், சாவகச்சேரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டவர்களாவர்.சந்தேகநபர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட வுள்ளனர்.