எமது இளம் தலைமுறையில், பலரின் நடவடிக்கைகள் எமக்கு மிகுந்த மனவேதனையைத் தருவதாக அமைகின்றது. வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் ஒரு பண்பான, படித்த சமூகம் என்ற சிறப்புப் பெயரை கொண்டிருந்தது. ஆனால் அந்த சமூகம் இன்று பல வழிகளிலும் சீரழிக்கப்பட்டு வருகின்றது என்பதே உண்மை.
வாள் வெட்டுக் கலாச்சாரம், போதைப்பொருள் கலாச்சாரம் பாலியல் முறைகேடுகள் என பல்வேறு வழிகளில் எமது வாழ்வியல் பண்பாடுகள் சீரழிக்கப்படுகின்றன. இவை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாதவை. இவற்றின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்று தெரிந்தும் நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.
கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகக் கலாசாரவிழா, நேற்றுச் செவ்வாய்க்கிழமை முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில்இடம்பெற்றது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதல்வர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,

அண்மையில் இராணுவ வீரர்கள் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்களாம். பாதுகாப்பு கடமைகளை எமது கைகளில் ஒப்படையுங்கள், நாம் வாள்வெட்டுக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய ஆவா குழு மற்றும் சனா குழு ஆகியவற்றை முழுமையாக எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து இல்லாதொழிக்கின்றோம் என்று கூறியிருந்தார்கள்.
குறித்த குழுவினர் பற்றிய செயற்பாடுகள் பற்றி இராணுவ வீரர்கள் ஏற்கெனவே அறிந்து வைத்திருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகின்றது. அவ்வாறாயின் அவர்களைக் கைது செய்வதற்கும், ஏற்ற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஏதுவாக பொலிஸாருடன் இணைந்து அவர்கள் ஏன் செயற்படக்கூடாது என்ற கேள்வி எழுகின்றது.