அறிவியல்
போலி செய்திகள்; கூகிள் நடவடிக்கை
அரசியல் மற்றும் வியாபார நோக்கம் கருதி வெளியாகும் போலி செய்திகளை உள்ளடகிய இணைய தளங்களை தாம் தடை செய்யக்கூடும் என கூகிள் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.கூகிளில் நாங்கள் சில விழுமியங்கள் குறித்து அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். கருத்துச் சுதந்திரத்தை கூகிள் மதிப்பளித்து, அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்கிறது எனவும் சுந்தர் பிச்சை பிபிசியிடம் தெரிவித்தார்.அண்மையில் ஏற்பட்ட சில குறைபாடுகளில் இருந்து கூகிள் கற்றுக்கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நிலாவை கடந்து சென்றது பறக்கும் தட்டுக்களா?
கடந்த 12 ஆம் திகதி மிகப்பஎரிய நிலாவினைக் காண [சுப்பர் மூனை ] வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தென்பட்டுள்ளன.இதன் போது குறுகிய இடைவெளியில் இரு அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் கடந்து செல்வதை குறித்த காணொளியில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.கடந்த 12 ஆம் திகதி சனிக்கிழமை இரவு சுப்பர் மூனை விசேட தொலைநோக்கி பொருத்தப்பட்ட கமரா மூலம் அரிசோனாவில் படமாக்கும் போது குறித்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண்ணை ஆணாக மாற்றி மும்பை மருத்துவர்கள் சாதனை
மும்பை: குரோமோசோம்களின் குளறுபடியால் பாலியல் மாற்றத்திற்கு உள்ளாகும் ஆண்-பெண்கள் பிறப்புறுப்பை மாற்றிக்கொள்ள விடிவுகாலம் பிறந்துள்ளது. பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதை உலகின் பல நாடுகள் அங்கீகரித்துள்ள போதிலும், இது ஒரு ஆபத்தான அறுவை சிகிச்சையாகவே கருதுகிறது மருத்துவ உலகம். இந்நிலையில், பெங்களூரை சேர்ந்த 21 வயது இளம் பெண், தன்னை ஆணாக கருதி வாழ்ந்து வந்தார். இதனால் மூன்றாம் பாலினத்தவராக அவரை கருதிய குடும்பத்தாரும், சமூகமும் ஒதுக்கி தள்ளியது. கோபமடைந்த அந்த பெண், தன்னை முழுமையான ஆணாக மாற்றிக்கொள்ள விரும்பினார். அவரின் இந்த…
பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்கள் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளனர்.விண்வெளியில் 4 மாதங்கள் தங்கியிருந்த இவர்கள் மூவரும் தற்போது கசக்ஸ்தானை அடைந்துள்ளனர்.எதிர்காலத்தில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படவுள்ள விண்வெளி வாகனங்களுக்கு ஒரு தளத்தை நிறுவுதல் மற்றும் விண்வெளியில் டிஎன்ஏ மரபணு வரிசைமுறையை முதல் முறையாக பயன்படுத்துவது ஆகியவை இந்த விண்வெளி வீரர்களின் பணிகளில் உள்ளடங்கும்.விண்வெளியில் இருந்த காலத்தில் தான் பணிச்சுமையுடன் மிகவும் பரபரப்பாக இருந்ததாகவும், இக்காலகட்டத்தில் பூமியில் என்ன நடந்தது என்பது தனக்கு…
ஹைட்ரோஃபுளூரோகார்பன்களை ஒழிக்க ஒப்பந்தம்
சுமார் இருநூறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், உலக வெப்பமயமாதலுக்கு அதிக பங்களிப்பைச் செய்யும் ஹைட்ரோஃபுளூரோகார்பன்களை அகற்றுவதற்கான ஓர் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளனர்.உலக வெப்பமயமாதல் குறித்து ரூவாண்டாவில் நடைபெற்ற மாநாட்டின் ஒரு பகுதிImage copyrightGETTY IMAGESஉலக வெப்பமயமாதல் குறித்து ரூவாண்டாவில் நடைபெற்ற மாநாட்டின் ஒரு பகுதிருவண்டா தலைநகர் கிகாலியில் கூடியிருந்த பிரதிநிதிகள் இரவு முழுவதும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின், ஹைட்ரோஃபுளூரோகார்பன் பயன்பாட்டைப் படிப்படியாக நிறுத்துவது என்ற ஒப்பந்தத்தை ஆரவாரங்களுடன் அறிவித்தனர்.ஹைட்ரோஃபுளூரோகார்பன் என்பவை தான், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகள் ஆகிய சாதனங்கள் செயல்படத் தேவையான ஒரு…
தலைக்கவசம் அணியாமலேயே பயணிக்கலாம்
பி.எம்.டப்ளியூ புதிய வகை உந்திருளி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இந்த உந்துருளியினை ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணியத் தேவை இல்லை அந்தளவு பாதுகாப்பானது. சரிவுகள், பள்ளங்கள் , விபத்துக்களின்போது தானாக சரிசெய்துகொண்டு பயணிப்பவர்களை விளாது பாதுகாத்துக்கொள்ளும். கூடவே சமிக்கைகள் மற்றும் வேககட்டுப்பாட்டு என்பன என்பவற்றுக்கு எல்லாம் பொத்தான்களை அழுத்த தேவை இல்லை வெறும் விரல் அசைவுகளாலேயே செய்யமுடியும்.