ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியையும் ஊழல்வாதிகள் என்று குற்றஞ்சாட்டிக் கொள்கின்றனர் எனினும் மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் ஊழல்வாதிகள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஊழல் பற்றி நீங்கள் பேசி வருகின்றீர்கள். அவ்வாறு பேசிப் பேசியே நீங்கள் மக்களை முட்டாளாக்குகின்றீர்களா? ஊழல் பற்றி பேசுகின்றீர்கள் அப்படி இடம்பெற்றிருந்தால் ஊழலுக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட நபர் யார்? அவ்வாறு ஒரு நபர் இருக்கிறாரா? என்றும், சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற பிணைமுறி மோசடி தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.