இலங்கையில் நடைமுறையிலுள்ள மிகவும் மோசமான சட்டமாகக் கருதப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மிக வும் மோசமானது என பொது அமைப்புக்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தெரிவிக்கும் குற்ற ச்சாட்டுக்கள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மங்கள சமரவீர, சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமையவே புதிய சட்டம் உருவாக்கப்படும் என்று உறுதியளித்தார்.
பயங்கரவாதத் எதிர்ப்புச் சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகளை மேற்பார்வை செய்யும் பணியில் தாம் ஈடு பட்டுள்ளதால், இதனை உறுதியாகக் கூற முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டதிட்டங்களை உள்ளடக்கி சர்வதேச தரத்திலும் முன்னையதை விட மிகவும் உறுதியாகவும் கடைப்பிடிக்கக்கூடியதாக புதிய பயங்கரவாத தடைச்சட்டம் அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியி ட்டுள்ளார்.
அண்மைய நாட்களாக யாழ்ப்பாணத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தொடரும் கைதுகள் குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் சமரவீர, கடும் விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகியி ருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் மிகவும் மோசமாக நடைமுறை ப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாகவும் தெரிவித்து ள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் ஒரு தசாப்தகால ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மனநிலை மாற்றத்தை உடன டியாக மாற்றியமைக்க முடியாது என்றும் குறிப்பிட்ட அமைச்சர் சமரவீர, கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்த அதிகாரிகளும், அதிகார வர்க்கத்தினருமே தொடர்ந்தும் பதவிகளில் இருப்பதால் ஆட்சி மாறினா லும் சில விடயங்களை மாற்ற முடியாதிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஒரு இரவில் இவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துவது சிரமமான விடயம் என்று கூறிய அமை ச்சர், படிப்படியாகவே மாற்றியமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.