தமிழ் மக்களின் தன்னியல்பான மக்கள் எழுச்சி நிகழ்வான எழுக தமிழ் எழுச்சிக்கு எதிர்ப்புணர்வினை நேரடியாக காட்ட இயலாத சிங்கள அரசு மாணவர்களை படுகொலை செய்து பதிலடி கொடுத்துள்ளது.
அரசியல் ஆய்வாளர் திரு மு திருனாவுக்கரசு அவர்கள் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ்வானொலியான உயிரோடையில் இடம்பெற்ற கலந்துரயாடல் நிகழ்ச்சியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிங்கள பொலிசாரினால் கொல்லபப்ட்டது ஒரு சாதாரண விடயம் அல்ல இது ஒரு திட்டமிட்ட பதிலடித் தாக்குதல். சிங்கள அரசு காலங்காலமாக தமிழர் எழுச்சி நிகழ்வுகளை ஆயுதமுனையில் அடக்கிய வரலாறுகளே உள்ளன அதற்கு இந்த தாக்குதல் சம்பவமும் ஓர் எடுத்துக்காட்டு.
யாழ் பல்கலைகக்ழகம் இலங்கையிலேயே ஓர் முன்னுதாரணமான கல்விச்சாலை அது ஒரு அரசியல், சமூக, பண்பாட்டு விழுமியங்களை சுமந்து செல்லும் பல்கலைக்கழகம். தமிழ் மக்களது இந்த உயர் கல்வி வளாகத்தில் இருந்துதான் பல்வேறு கால கட்டத்திலும் எழுச்சிக்கான வித்துக்கள் இடப்படுகின்றன, பொங்குதமிழ், எழுக தமிழ் என்பனவும் அப்படித்தான்.
ஆகவேதான் இவ்வாறான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளமுடியாத சிங்கள அரசுகள் தமது கையலகாத்தனத்தை காட்டியுள்ளது. இவ்வாறு திரு மு திருனாவுக்கரசு அவர்கள் விவரித்துள்ளார்.
முழுமையான கலந்துரையாடலை இங்கே கேட்கலாம்