தமிழ்நாட்டில் நேற்று, வெள்ளிக்கிழமை, மேலும் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்நோய் பரவுவதில் தமிழ்நாடு இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 84 வயது மூதாட்டி ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த மூதாட்டியின் குடும்ப உறுப்பினர்களான 54 வயது பெண் ஒருவரும் 25 வயது ஆண் ஒருவரும் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.