போர்க்குற்றத்தில் ஈடுபட்ட காரணத்தினால் ஐ.நா. அமைதிப் படையில் இணைந்து கொள்வதற்கு 360 சிங்கள இராணுவத்தினருக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மாலியில் ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக 212 இராணுவத்தினரைக் கவச வாகனங்கள் மற்றும் ஆயுதங்களுடன் தருமாறு ஐ.நா. கோரியிருந்தது. இதற்கா கத் தெரிவு செய்யப்பட்ட 400 படையினரைக் கொண்ட பட்டியல் ஐ.நாவுக்கு அனுப்பப்பட்டது.
இதில் 40 பேரை மட்டுமே ஐ.நா அங்கீகரித்துள்ளது. ஏனையவர்கள் இறுதிக்கட்டப் போரில் பங்கேற்றவர்கள் என்ற அடிப்படையில், நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
மாலியில் இராணுவத்தினருக்கான கட்டளை அதிகாரியாகப் பணியாற்றத் தெரிவு செய்யப்பட்ட கேணல் சமந்த விக்கிரமசேனவின் பெயரும் ஐ.நாவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்கள், வாகனங்களுடன் படையினர் தர நியமனங்களுக்கேற்ப உள்ளனரா என்பதை, ஆய்வு செய்ய ஐ.நா குழுவொன்று எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது