நினைவு நாட்கள்
அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்
அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம். (இலங்கை போர்நிறுத்தக்கண்காணிப்புக்குழு_தமிழீழவிடுதலைப்புலிகள் சார்பான பிரதிநிதி மன்னார் மாவட்டம்) அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மரியநாயகம் மாஸ்டர் அவர்களின் இழப்புச்செய்தியறிந்து ஆழ்ந்த துயரத்தில் வேதனையடைகின்றோம்.மக்கள் கல்விச்சமூகம் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் உயரிய போராளிகள் பொறுப்பாளர்கள் தளபதிகள் என இவரது தேசப்பற்றுக்கென்று தனித்துவமான மரியாதைக்குரியவராக திகழ்ந்தவர். இவர் ஆங்கில ஆசிரியராக பள்ளிமுதல்வராக ஆங்கில கல்விக்கான உதவிக்கல்விப்பணிப்பாளராக தனது பணியின் ஊடாக அரச உயர்பதவிகளைப்பெற்று ஓய்வு நிலைபெற்ற சமகாலத்தில் தாயக விடுதலைப்போராட்ட எழுச்சிமிகுகாலத்தை உருவாக்க போராளிகளுடன் இணைந்து பக்கபலமாக உழைத்த உண்மைத்துவமான மனிதர். தமிழர்…
மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவரும் பள்ளிப் பருவம் முதல், இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றியவரும் .தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர். இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல், பெற்றோரை இழந்த சிறார்களைப் பராமரித்தல் போன்ற பல தொண்டுகளைச் செய்த மாபெரும் மனிதர் ஆவார். இனவாத அரசின்…
தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
பார்வதி.பார்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை.இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது!2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, ‘பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். ‘நான்தான் அவர் அன்னை’ என்று…
கேணல் ரூபன்,லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோரின் 8ஆம் ஆண்டு வீர வணக்க நாள்
சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆவர்களின் 8ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும். தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வந்தமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை…