வாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே வடக்கின் நிலை

எமது இளம் தலைமுறையில், பலரின் நடவடிக்கைகள் எமக்கு மிகுந்த மனவேதனையைத் தருவதாக அமைகின்றது. வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் ஒரு பண்பான, படித்த சமூகம் என்ற சிறப்புப் பெயரை கொண்டிருந்தது. ஆனால் அந்த சமூகம் இன்று பல வழிகளிலும் சீரழிக்கப்பட்டு வருகின்றது என்பதே உண்மை.
 
வாள் வெட்டுக் கலாச்சாரம், போதைப்பொருள் கலாச்சாரம் பாலியல் முறைகேடுகள் என பல்வேறு வழிகளில் எமது வாழ்வியல் பண்பாடுகள் சீரழிக்கப்படுகின்றன. இவை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாதவை. இவற்றின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்று தெரிந்தும் நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.

கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகக் கலாசாரவிழா, நேற்றுச் செவ்வாய்க்கிழமை முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில்இடம்பெற்றது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதல்வர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,
 
அண்மையில் இராணுவ வீரர்கள் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்களாம். பாதுகாப்பு கடமைகளை எமது கைகளில் ஒப்படையுங்கள், நாம் வாள்வெட்டுக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய ஆவா குழு மற்றும் சனா குழு ஆகியவற்றை முழுமையாக எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து இல்லாதொழிக்கின்றோம் என்று கூறியிருந்தார்கள்.
 
குறித்த குழுவினர் பற்றிய செயற்பாடுகள் பற்றி இராணுவ வீரர்கள் ஏற்கெனவே அறிந்து வைத்திருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகின்றது. அவ்வாறாயின் அவர்களைக் கைது செய்வதற்கும், ஏற்ற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஏதுவாக பொலிஸாருடன் இணைந்து அவர்கள் ஏன் செயற்படக்கூடாது என்ற கேள்வி எழுகின்றது.

விக்னேஸ்வரன் அரசியக் சட்டத்தை மீறியுள்ளாராம்

முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் இலண்டனுக்கு சென்றமை தொடர்பில் அரசியல் சட்டத்தை மீறியுள்ளதாக சிங்கள அரசு கூறியுள்ளது.

இதேபோன்று, தற்பொழுது பதில் முதலமைச்சராக கடமையாற்றுபவரும் வடக்கு ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவில்லையெனவும் ஆளுனர் செயலகம் கூறுகின்றது.

வட மாகாண முதலமைச்சர் கடந்த 14 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதியான இன்று வரை வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது விஜயம் முடியும் வரை பதில் முதலமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாதுள்ளதனால், கடந்த 15 ஆம் திகதி கூடிய வட மாகாண சபைக் கூட்டத்தின் போது சபைத் தலைவர் சி.வி.கே. சிவஞானமினால், கல்வி அமைச்சர் ரி. குருகுலராஜா பதில் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள இவர், இதுவரை வட மாகாண ஆளுநர் முன்னிலையில் பதில் முதலமைச்சராக பொறுப்புக்களைப் பாரமெடுக்காதுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அரசியலமைப்பின் 154 ஆம் உறுப்புரையில், முதலமைச்சர் ஒருவர் வெளிநாடு செல்வதாயின், ஆளுநரின் அனுமதியைப் பெற்று, பதில் ஒருவரை நியமித்து விட்டு, அவ்வாறு நியமிக்கப்பட்டதனை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தான் வெளிநாடு செல்ல முடியும். இருப்பினும், இந்த நடைமுறைகளை வடக்கு முதலமைச்சர் மீறியுள்ளதாக ஆளுனர் செயலகம் கூறியுள்ளது.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…