Super User Written by  Jun 05, 2017 - 9656 Views

20வது தமிழர் விளையாட்டு விழா.

பாரிசின் மிகப்பெரிய பூங்கா – மைதானமான லு புசே (le Bourget) LAire des Vents Dugnyபூங்காவில் பல்லாயிரக்கணக்கில் தமிழ்மக்கள் ஒன்றுகூடி – ஒருதாய் பிள்ளைகளாய் முழுநாள் பொழுதைக்கழிக்கும் மாபெரும் தமிழர் விழா. 20வது தடவையாக எதிர்வரும் 02.07.2017 ஞாயிறன்று நிகழவுள்ளது.

பிரான்ஸ் இளம் தமிழ் தலைமுறைக்கும், மூத்த தலைமுறைக்கும் இடையேயான பண்பாட்டுகைகோர்ப்பு

தமிழால் ஒன்றுபட்டு - திரண்டால் மிடுக்கு

பத்தொன்பதாண்டுகளுக்கு முன்னர் பிரான்சு வாழ் ஈழத்தமிழ்சமூகத்தின் மத்தியில் சமூக - பண்பாட்டு - விளையாட்டுத்தளத்தில் நட்புறவினை  மேம்படுத்தவும் - உருவாகிவரும்அடுத்ததடுத்த தலைமுறைகளிடையே புரிதலை ஏற்படுத்துதற்குமானதொரு வழிமுறையாகதமிழர் விளையாட்டுவிழா உருவாக்கப்பட்டது.  மகிழ்வூட்டும்  நிகழ்வாகவும் - பாரம்பரியங்களை நினைவூட்டும் நிகழ்வாகவும் இது வடிவமைக்கப்பட்டது.

பிரான்சு தழிழ் சமூகத்தின் மத்தியில் நிலவும் சமூக நெருக்குவாரங்கள் - பண்பாட்டுபுரிதல்கள் - பாரம்பரியம் தொடர்பான அறிமுகங்கள் என்பனவற்றினைஆரோக்கியமானமுறையில் எதிர்கொள்வதற்கான சமூக செயற்பாடுகளை எதுவிதபுறஅழுத்தங்களுக்கும் இடம்கொடுக்காது தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்கின்றஎமது திடசங்கற்பமே தொடர்ந்தும் தமிழர் விளையாட்டு விழாவினை முன்னெடுக்கவைக்கின்றது. பெரும் பொருளாதார நெருக்கடிகள், எதிர்காலம் பற்றிய எதுவித புரிதலுமற்றசில தரப்புக்களின் அழுத்தங்கள்  என்பனவற்றினை தாண்டியும் நாம் இந்தசெயற்பாட்டிற்காக உழைக்கின்றோம்.

ஒரு சமூக செயற்பாடாக - எதிர்காலம் பற்றிய விஞ்ஞானபூர்வமான நடவடிக்கையாக - தலைமுறைகளை ஒன்றிணைக்கும் பண்பாட்டு நிகழ்வாக இவ்வாண்டும் தமிழர்விளையாட்டுவிழா பெரும் நிகழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கானஆதரவினை வழங்குமாறு உரிமையுடனும் - பொறுப்புணர்வுடனும் உங்களைகோருகின்றோம்.

நிகழ்வுகளுக்கான  ஆதரவு - பொதுவான ஆதரவு என்கின்ற வடிவத்தில் உங்கள்பொருளாதார உதவிகளை வழங்குமாறு தாரளமனங்கொண்டவர்களிடம் கோருகின்றோம். 

நிகழ்வில் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்று - தலைமுறைகளை ஒருங்கிணைத்து - பிரான்சுதமிழ்சமூகத்தினை செழுமைப்படுத்திட வாருங்கள் என அனைவரையும் அழைக்கின்றோம்.

நிகழ்வில் இளையதலைமுறையினர் அறிந்திராத பாரம்பரிய தமிழர் விளையாட்டுக்களானகிளித்தட்டு, சங்கீதக்கதிரை, முட்டியுடைத்தல், தலையணைச்சண்டை, கயிறுழுத்தல்போன்ற விளையாட்டுக்களுடன், கரப்பந்தாட்டம், கரம், சதுரங்கம் இன்னும் பல வேடிக்கைவினோத விளையாட்டுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  புதிதாக குறுந்தூர மரதனும்மைதானத்தில் நடைபெறவுள்ளது, பங்குபற்ற விரும்பும் போட்டியாளர்கள் பதிவுகளைமேற்கொள்ளவும்.

கரப்பந்தாட்டம், கிளித்தட்டு மற்றும் குழு விளையாட்டுக்களில் பங்குபற்ற விரும்புபவர்கள்மைதானத்தில் விளையாட்டுக்கான பணிமனையில் குழுக்களை பதிவு செய்து  இணைந்துகொள்ளலாம்.

இசைநிகழ்வில் கலந்து கொண்டு பாட விரும்புவோர், மேற்கத்தேயநடனம் ஆடவிரும்புவோர்,கலை நிகழ்ச்சிகளை வழங்க விரும்புவோர் எமது பணிமனையில்இ கலைப்பிரிவுடன்தொடர்பு கொண்டு இணைந்து கொள்ளலாம். சிறப்பாக தெருக்கூத்து, நாட்டுக்கூத்துபோன்ற நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் பல்வேறு தமிழர் சமூக அமைப்புக்களினதும், வர்த்தக நிவனங்களினதும்  காட்சிஅறைகளும்  மைதானத்தில் அமைக்கப்படவுள்ளது.

மைதானத்தில் விளம்பர வியாபார கடைகளை நிறுவ விரும்பும் வியாபார நிறுவனங்கள்எமது பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்

விழா சிறப்பு மலர், துண்டுப்பிரசுரங்கள், பெரிய விளம்பர பிரசுரங்கள் ஆகியவற்றில்விளம்பர்கள் செய்ய விரும்புவோர்இ விழாவிற்கு உதவ விரும்புவோர் உடனடியாக எமதுபணிமனையுடன் தொடர்பு கொள்ளவும்

கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக ஈழத்தில் இருந்து கேட்கும் அவலக்குரல்களுக்குஆதரவுக்கரம் கொடுக்கும் ஒரே நோக்குடன் இன்றும் தனது சேவையைத்தொடர்ந்துகொண்டிருக்கும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் கடந்த 19 வருடங்களாகதமிழர் விளையாட்டு விழா எனும் நிகழ்வை வருடாவருடம் சிறப்புற நடாத்துவதன் மூலம்தாயக உறவுகளை மனதில் நினைந்து பிரான்ஸ் வாழ் தமிழர்கள் அனைவரும் வருடத்தில்ஒரு முறை ஒன்றாக ஒன்று கூடவும் அதனுடாக அன்று கிடைக்கும் நிதியின் மூலம்தேவையான உதவிகளை தாயக உறவுகளுக்கு வழங்கும் நடவடிக்கையையும் செய்துவருகின்றது.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் வெளிப்படையான கட்டமைப்பாகவும், பிரான்ஸ்அரசின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப செயற்படும் நிறுவனமாகவும், நிதி மற்றும் நிர்வாகவிடயங்களில் பொறுப்புவாய்ந்த நிறுவனமாகவும், தமிழ்மக்களின் நலன்களிற்கும் - ஒற்றுமைக்கும்  உதவிடும் நிறுவனமாகவும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ்தொடர்ந்தும் செயற்படு வருகின்றது.

இவ் ஆண்டும் தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படும் அனைத்து அமைப்புக்களின்ஆதரவோடு நடாத்தவுள்ளது

காலை 10.00 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி தமிழர் பண்பாட்டு தவில்நாதஸ்வர இசை முளங்க, தமிழ் இனிய நடனத்துடன் சிறப்பு விருந்தினர்கள் அழைப்புஇடம்பெற்று கொடியேற்றலுடன் விளையாட்டுக்கள் ஆரம்பமாகும்

அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்

நன்றி

ஓன்றிணைவோம் சேவை செய்வோம்

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் – பிரான்ஸ்

தமிழர் விளையாட்டுவிழா ஏற்பாட்டுக்குழு  , தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

தொடர்புகட்கு: 01 40 38 30 74

Login to post comments

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…