தாயகம்
இலங்கைக்காக வக்காலத்து வாங்கிய பிரிட்டன்: இதுதான் BTF,GTF ஆகியோரின் அரசியல் பணியாம்
ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுலாக்க இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டுமென பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய இராஜ்யத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவல்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஆலோக் ஷர்மா கருத்து வெளியிடுகையில்,இலங்கை வெளிவிவகார அமைச்சர் மனித உரிமைகள் பேரவையுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை கொண்டுள்ளதாக பாராட்டியுள்ளார்.ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் அமைச்சர் மட்ட கூட்டத் தொடரில் அவர் ஐக்கிய இராஜ்யத்தில் அறிக்கையை வாசித்த நிலையில், பேரவையின் அமர்வுகள்…
புரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற் மாங்குளத்தில் மக்கள் அஞ்சலிக்காக
ஈழத்தின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் பூதவுலுடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று மாங்குளத்தில் வைக்கப்பட்டுள்ளது.ஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன் தனது 57 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் உயிரிழந்தார்.சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இவரது பூதவுடல் நேற்று மாலை முதல் இன்று காலை வரை யாழ்ப்பாணம் – ஓட்டுமடத்திலுள்ள மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, இன்று மாங்குளத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.இன்றையதினம் மாங்குளத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று பின்னர் பூதவுடல் இன்று மாலை கிளிநொச்சி…
புரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர் சாந்தன் சாவடைந்தார்
ஈழத்தின் தலைசிறந்த பாடகர் எஸ்.ஜி. சாந்தன் இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார். பிரபல தென்னிந்திய பாடகர் ஆலங்குடி சோமு தெய்வம் திரைப்படத்திற்காக பாடிய "மருதமலை மாமணியே முருகையா" என்ற பாடலை 1972 ஆம் ஆண்டு கொழும்பில் சிறுவனாயிருந்தபோது ஏதேச்சையாக பாடியதிலிருந்து சாந்தனின் கலைப்பயணம் ஆரம்பமாகியது.தொடர்ந்து பல புரட்சிப் பாடல்கள் பாடியதோடு எண்பதுகளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்து பன்னூறு தமிழீழ எழுச்சிப் பாடல்களைப் பாடியிருந்தார். போராட்ட காலத்தில் தமிழீழத்தின் ஆஸ்தான பாடகராய் மிகுந்த மரியாதைக்குரியவராய் வலம்வந்தவர் சாந்தன்.எண்பதுகளின் இறுதியில் "இந்த மண்…
போர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கான நீதிப் பொறிமுறையில்,வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என, ஐ.நாவுக்கும், சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலை வர்களுக்கும் தாம் அறிவித்து விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.பொலனறுவையில் நேற்று புதிய நீதிமன்றத் தொகுதியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய பின்னர், உரையாற்றியபோதே ஜனாதி பதி இவ்வாறு குறிப்பிட்டார்.“வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைப் பொறிமுறையில் உள்ளடக்க முடியாது என்ற தகவலை ஐ.நா பொதுச்செயலர் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மற்றும் சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலைவர்களுக்கும்…
எமது நிலம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்:கேப்பாபிலவு மக்கள்
சொந்த நிலங்கள் மீண்டும் கிடைக்கும் வரைக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனா்.முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பன்னிரண்டாவது நாளாக தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனா்.இரவில் அதிகளவான பனி, பகலில் அதிக வெயில் என காலநிலையின் தாக்கத்திற்கு மத்தியிலும் மக்கள் தமது சொந்த இடத்திற்கு வெல்வதில் உறுதியாக உள்ளனர். யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களை கடந்த போதும் தங்களின் சொந்த விவசாய நிலங்கள் இல்லாது இருப்பது அவா்களின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே…
முஸ்லிம் காங்கிரஸ் தொடரும் குடுமி சண்டை
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகத்துக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டமையைப் போன்று, சகல அதிகாரங்களையும் வழங்கும் வகையில் யாப்பில் மாற்றம் கொண்டுவருவதாகவும், கட்சியின் அனைத்து அதிகாரமும் கொண்ட செயலாளராக மன்சூர் எ காதரை நியமிக்கவுள்ளதாகவும் தாருஸ்ஸலாத்தில் நேற்றிரவு நடைபெற்ற கட்டாய அதியுயர்பீடக் கூட்டத்தின் போது ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27ஆவது பேராளர் மாநாடு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் நாடளாவிய ரீதியிலிருந்து வருகை தரும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இன்றைய இந்த…