ஈழத்தின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் பூதவுலுடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று மாங்குளத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன் தனது 57 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது பூதவுடல் நேற்று மாலை முதல் இன்று காலை வரை யாழ்ப்பாணம் – ஓட்டுமடத்திலுள்ள மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, இன்று மாங்குளத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
இன்றையதினம் மாங்குளத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று பின்னர் பூதவுடல் இன்று மாலை கிளிநொச்சி விவேகானந்தாநகரில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதுடன் நாளை செவ்வாய்க்கிழமை இறுதி அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.