புரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற் மாங்குளத்தில் மக்கள் அஞ்சலிக்காக‌

ஈழத்தின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் பூதவுலுடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று மாங்குளத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன் தனது 57 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது பூதவுடல் நேற்று மாலை முதல் இன்று காலை வரை யாழ்ப்பாணம் – ஓட்டுமடத்திலுள்ள மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, இன்று மாங்குளத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இன்றையதினம் மாங்குளத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று பின்னர் பூதவுடல் இன்று மாலை கிளிநொச்சி விவேகானந்தாநகரில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதுடன் நாளை செவ்வாய்க்கிழமை இறுதி அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர் சாந்தன் சாவடைந்தார்

ஈழத்தின் தலைசிறந்த பாடகர் எஸ்.ஜி. சாந்தன் இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார்.

பிரபல தென்னிந்திய பாடகர் ஆலங்குடி சோமு தெய்வம் திரைப்படத்திற்காக பாடிய "மருதமலை மாமணியே முருகையா" என்ற பாடலை 1972 ஆம் ஆண்டு கொழும்பில் சிறுவனாயிருந்தபோது ஏதேச்சையாக பாடியதிலிருந்து சாந்தனின் கலைப்பயணம் ஆரம்பமாகியது.

தொடர்ந்து பல புரட்சிப் பாடல்கள் பாடியதோடு எண்பதுகளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்து பன்னூறு தமிழீழ எழுச்சிப் பாடல்களைப் பாடியிருந்தார். போராட்ட காலத்தில் தமிழீழத்தின் ஆஸ்தான பாடகராய் மிகுந்த மரியாதைக்குரியவராய் வலம்வந்தவர் சாந்தன்.

எண்பதுகளின் இறுதியில் "இந்த மண் எங்களின் சொந்த மண்" என்ற பாடலில் ஆரம்பித்து "களம் காண விரைகின்ற வேங்கைகள் நாங்கள்....", "ஆழக்கடல் எங்கும் சோழ மகராஜன்..", "கரும்புலிகள் என நாங்கள்...", "எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம்" முதலான நூற்றுக்கணக்கான எழுச்சிப் பாடல்களும் "பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்" முதலான பக்திப் பாடல்களும் பாடியிருந்தார்.

போராட்ட எழுச்சியை ஈழத்தின் தமிழ் இளைஞர் யுவதிகளிடையே ஊட்டியதில் சாந்தனின் கணீரென்ற உச்ச ஸ்தாயி குரலுக்கு பெரும் பங்குண்டு.

கடும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டுவந்த சாந்தன் கடந்த வருடம் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்துகொண்டர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…