புரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற் மாங்குளத்தில் மக்கள் அஞ்சலிக்காக‌

ஈழத்தின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் பூதவுலுடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று மாங்குளத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன் தனது 57 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது பூதவுடல் நேற்று மாலை முதல் இன்று காலை வரை யாழ்ப்பாணம் – ஓட்டுமடத்திலுள்ள மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, இன்று மாங்குளத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இன்றையதினம் மாங்குளத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று பின்னர் பூதவுடல் இன்று மாலை கிளிநொச்சி விவேகானந்தாநகரில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதுடன் நாளை செவ்வாய்க்கிழமை இறுதி அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர் சாந்தன் சாவடைந்தார்

ஈழத்தின் தலைசிறந்த பாடகர் எஸ்.ஜி. சாந்தன் இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார்.

பிரபல தென்னிந்திய பாடகர் ஆலங்குடி சோமு தெய்வம் திரைப்படத்திற்காக பாடிய "மருதமலை மாமணியே முருகையா" என்ற பாடலை 1972 ஆம் ஆண்டு கொழும்பில் சிறுவனாயிருந்தபோது ஏதேச்சையாக பாடியதிலிருந்து சாந்தனின் கலைப்பயணம் ஆரம்பமாகியது.

தொடர்ந்து பல புரட்சிப் பாடல்கள் பாடியதோடு எண்பதுகளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்து பன்னூறு தமிழீழ எழுச்சிப் பாடல்களைப் பாடியிருந்தார். போராட்ட காலத்தில் தமிழீழத்தின் ஆஸ்தான பாடகராய் மிகுந்த மரியாதைக்குரியவராய் வலம்வந்தவர் சாந்தன்.

எண்பதுகளின் இறுதியில் "இந்த மண் எங்களின் சொந்த மண்" என்ற பாடலில் ஆரம்பித்து "களம் காண விரைகின்ற வேங்கைகள் நாங்கள்....", "ஆழக்கடல் எங்கும் சோழ மகராஜன்..", "கரும்புலிகள் என நாங்கள்...", "எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம்" முதலான நூற்றுக்கணக்கான எழுச்சிப் பாடல்களும் "பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்" முதலான பக்திப் பாடல்களும் பாடியிருந்தார்.

போராட்ட எழுச்சியை ஈழத்தின் தமிழ் இளைஞர் யுவதிகளிடையே ஊட்டியதில் சாந்தனின் கணீரென்ற உச்ச ஸ்தாயி குரலுக்கு பெரும் பங்குண்டு.

கடும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டுவந்த சாந்தன் கடந்த வருடம் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்துகொண்டர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

போர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கான நீதிப் பொறிமுறையில்,வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என, ஐ.நாவுக்கும், சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலை வர்களுக்கும் தாம் அறிவித்து விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் நேற்று புதிய நீதிமன்றத் தொகுதியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய பின்னர், உரையாற்றியபோதே ஜனாதி பதி இவ்வாறு குறிப்பிட்டார்.

“வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைப் பொறிமுறையில் உள்ளடக்க முடியாது என்ற தகவலை ஐ.நா பொதுச்செயலர் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மற்றும் சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலைவர்களுக்கும் தெரிவித்து விட்டேன்.

நாட்டின் சட்ட மற்றும் அரசியலமைப்பு வரையறைகளின்படி, எந்தவொரு வழக்கிலும் வெளிநாட்டு நீதிபதிகளை எமது நாட்டுக்கு கொண்டு வருவதற்கு இடமளிக்க முடியாது.

அவ்வாறு நாம், வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வருவதானால், நாட்டின் சட்டங்களையும், அரசியலமைப்பையும் மாற்ற வேண்டும்.

இலங்கையில் உள்ள நீதிபதிகள், கல்வி, மதிநுட்பம், ஆற்றல், அனுபவம் ஆகியவற்றில், உலகின் வேறெந்த நீதிபதிகளையும் விட இர ண்டாம் தரமானவர்கள் அல்ல. அவர்கள் எந்த உள்நாட்டு மற்றும் அனைத்துலக விவகாரங்களையும் கையாளக் கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.

எனவே இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் சேவையை பெற வேண்டிய அவசியம் இல்லை.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை

2011ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் தடுப்பு பட்டியலில், காளைகளை அப்போதைய, மத்திய சுற்றுசூழல் மற்றும வனத்துறை அமைச்சகம் சேர்த்தது. இதனால், ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன்பிறகு விலங்குகள் தடுப்பு பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது மாநில அரசு ஒரு அவசர சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வழியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த சட்டத்திற்கு அனேகமாக அனுமதி கிடைத்துவிடும் என்பது மத்திய அரசின் சமிக்ஞை உணர்த்துகிறது. ஆனால் இது ஒரு தற்காலிக தீர்வுதான். காளைகளை காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து விலக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதே நிரந்தரமான தீர்வாக இருக்க முடியும். இக்கோரிக்கையை வலியுறுத்தியே இன்று டிவிட்டரில் #ammendpca என்ற பெயரில் ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இப்போராட்டத்தின் வெற்றி என்பது சட்ட திருத்தத்தில்தான் அடங்கியுள்ளது. விலங்குகள் வதை தடுப்பு சட்டம் 160ல் திருத்தம் செய்வதன் மூலம் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு உரிமை தொடரும். இந்த சட்டத்தின் பிரிவு 11என், ஜல்லிக்கட்டை விலங்குகளுடனான சண்டையாக வர்ணிக்கிறது. அதை மாற்ற வேண்டும். பிரிவு 11/3 கலாசாரம் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளுக்காக காளைகளை பயன்படுத்த கூடாது என கூறுகிறது. அந்த ஷரத்தை நீக்க வேண்டும். அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இதை செய்ய முடியும். அதற்கான அழுத்தத்தை தமிழக எம்.பிக்கள் தொடர்ச்சியாக கொடுக்க வேண்டும். தமிழக மக்களும் தங்கள் எழுச்சி மூலம் இதையும் சாதித்து காட்ட வேண்டும்.

தாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம்

தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தாயக உறவுகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.


இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு நகரில் காந்தி சதுக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு ஒருமித்து கோஷங்களை எழுப்பினர்.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட குறிப்பாக இளைஞர்களினால் வலியுறுத்தி கூறப்பட்டது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எதிர்வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் மத்தியிலும் இடம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலரும் வெளியிட்டனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழகத்தின் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.

யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த இளைஞர் கழகங்கள், இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இதில் பங்கெடுத்திருந்தனர்.

மரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. நள்ளிரவு நேரத்திலும் மெரினாவில் இளைஞர்களும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் மனித தலைகளாக காணப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு வழக்கறிஞர்கள், வியாபாரிகள் தனியார் வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டம் வலுத்து வருவதால் ஏராளமான கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் 4வது நாளை எட்டியுள்ளது. நள்ளிரவு நேரம் என்றும் பாராமல் சென்னை மெரினா கடற்கரைக்கு ஏராளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் குவிந்து வருகின்றனர்.

பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிகின்றனர்.சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் மெரினாவுக்கு படையடுத்து வருகின்றனர். இதனால் சென்னை கலங்கரை விளக்கம் முதல் எம்ஜிஆர் நினைவிடம் வரை மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. மெரினாவில் குவிந்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் இன்று ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவரகள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினர், மாவீரர்களை நினைவுகூர்ந்து மெழுகுதிரிகளை ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

தாயக விடுதலைப்போரில் ஆகுதியாகிய மாவீரர்களை வழமையாக நவம்பர் மாதம் 27 ஆம் தேதியே யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அனுட்டித்து வந்துள்ளது.


இந்த மாவீரர் தினத்தை அனுட்டிப்பது சட்டத்திற்கு விரோதமானது என அறிவித்து, முந்தைய அரசாங்கம் அதற்குத் தடைவிதித்திருந்தது.


இந்த நிலையில் நேற்றிரவு யாழ் பல்கலைக்கழகத்தின் பல இடங்களிலும் மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டிருந்த நிலையில் இன்று நண்பகல் யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு அமைதியான முறையில் நடந்தேறியிருக்கின்றது.


ஆனையிறவு தொடரூந்து நிலையம் இன்று திறப்பு

ஆனையிறவு தொடரூந்து நிலையம் இன்று திறக்கப்படவுள்ளது. உதவியினால் கட்டி எழுப்பப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைப் பாட சாலை மாணவ மாணவர்களின் சேமிப்பு மற்றும் அர்ப்பணிப்பும் நன்கொடையாக வழங்க ப்பட்ட நிதியும் அவர்களினால் மேற்கொள்ளப்படும் தேசிய நற் பணியினை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் ஆசிரியர்களினால் வழங்கப்பட்ட நன்கொடையினையும் சேர்த்து கல்வி அமைச்சின் நிதியுதவியுடன் அன்பின் தரிப்பிடம் என கட்டி எழுப்பப்பட்ட ஆனையி றவு புகையிரதநிலையம் நாளையதினம் திறந்து வைக்கப்பட்வுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சர் வி .எஸ் .இராதாகிருஸணன் மற்றும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் பங்கேற்புடன் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்சம் அவர்களினால் நாளை காலை பத்துமணிக்கு புகையிரதநிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.

ராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது

விடுதலைப் புலிகள் இருந்த போது, யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான குற்றச்செயல்களும் இருக்கவில்லை அதனை செய்யும் குழுக்களும் இருக்கவில்லை என ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அனால் தற்போது ஆபத்தான பல குழுக்கள் இயங்குகின்றன அவற்றில் ஒனறுதான் .குடாநாட்டில் ஆவா குழு எனப்படும், உந்துருளிகளில் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு ஆகும். இந்த குழுவை முன்னைய ஆட்சி க்காலத்தில் வடக்கில் உயர் பதவியில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவரே, இரகசியமாக உருவாக்கினார் என்று ஆங்கில ஊடகம் ஒன்றுதெரிவித்துள்ளது.

மூத்த பொலிஸ்அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டியே இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், நன்கு திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட அடிப்படையில் இந்தக் குழு உருவாக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதையடுத்து, நடத்தப்பட்ட விசார ணைகளிலேயே பொலிஸ் இதனைக் கண்டுபிடித்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பாக ஊடகங்களிடம் எதையும் கூற வேண்டாம் என்று அரசியல் அதிகாரமட்டத்தில் இருந்து பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக குறித்த ஆங்கில ஊடகத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர், போருக்குப் பின்னர் வடக்கில் பல குழுக்கள் செயற்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்திய திரைப்படப் பாணியில் இந்தக் குழுக்களைச் சேர்ந்த இளைஞர்கள் வாள்கள், கத்திகளுடன், உந்துருளிகளில் திரிந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“2013ஆம் ஆண்டு இத்தகைய குழுவொன்றினால், பொலிஸைச் சேர்ந்த ஒருவரின் கை வெட்டப்பட்டது.

மாணவர்கள் படுகொலை; முடங்கியது வடக்கு, அனைத்து தரப்பும் ஆதரவு

பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் சிங்கள காவல்துறையினரால் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து வடக்கு முழுவதும் இன்று கதவடைப்பு இடம்பெறுகின்றது.

தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் நடைபெறாத நிலையில், வியாபார நிலையங்களும் மூடப்பட்டு சன நடமாட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதால் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…