முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவுடன், அவரது அணியால் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் உருவா க்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா மக்கள் முன்னணியின் பொதுக் குழுக் கூட்டம் விரைவில் நடத்தப்பட்டு அதன் ஊடாக கட்சிக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்படுவர் என பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அதேவேளை புதிய அரசியல் கட்சியை உருவாக்கினால், வீதியில் இறக்குவோம் என தமக்கு எச்சரிக்கை விடுத்த ஆட்சியி லுள்ளவர்கள், புதிய கட்சி தொடர்பான தகவல் அறிவிக்கப்பட்ட நாளே அவர்கள் வீதியில் இருந்ததை காணக் கிடைத்ததாகவும் காலி அம்பலங்கொடை பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பசில் ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாம் புதிய கட்சியொன்றை உருவாக்கினால் வீதியில் இறக்கப்படுவோம் என சிலர் எச்சரி த்தனர். ஆனால் எமது புதிய கட்சி தொடர்பான தகவல்கள் அறிவிக்கப்பட்ட அன்று எம்மை வீதியில் இறக்குவோம் என கொக்க ரித்தவர்கள் வீதியில் இருந்ததைக் கண்டோம்.
நாம் மக்கள் மத்தியில் சென்றுள்ளோம். எம்மை விமர்சித்தவர்கள் இன்று வீதிக்கு வந்துள்ளனர். நாம் உருவாக்கும் கட்சியின் தலை வர்கள் மக்கள். உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளவுள்ளோம்.
அதற்குப் பின்னர் கட்சிக்கான அதிகாரிகள் தெரிவு இடம்பெறும். மக்கள் மத்தியில் அடி மட்டத்திலிருந்து உருவாக்கப்படும் மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியாகவே இந்தக் கட்சி இருக்கும்.
அதனால் யாரை இணைத்துக்கொள்வது, இணைத்துக்கொள்ளக் கூடாது என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். பத்து லட்சம் பேரையே எமது கட்சியின் ஆரம்ப உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள உள்ளோம். இதற்கான உறுப்புரிமைப் பத்திரம் விரைவில் சுப நேரத்தில் விநியோகிக்க நடவடிக்கை எடுப்போம்.
சிலநேரம் பத்து இலட்சம் என்பது போதாமலும் போகலாம். ஏனெனில் எமது புதிய கட்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெருகி வருகின்றது என்றார்.