தாயகம்
முகமாலை தாக்குதல் முன்னாள் போராளி கைதின் பின் விடுதலை
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியில் பொலிஸ் ரோந்து பிரிவினர் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான முன்னாள் போராளி ஒருவரை கைது செய்துள்ளனர்.கடந்த மாதம் கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை கச்சார் வெளிப் பகுதியில் ரோந்து செல்லும் பொலிஸாரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. நள்ளிரவு 12.31 மணியளவில் இடம்பெற்ற இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலிஸார் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.பொலிஸாரை…
வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில் இரு அமைச்சர்கள் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, கூட்டுறவு மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரையே பதவி விலகவேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.அனேகமாக நாளை செவ்வாய்க் கிழமை நடைபெற இருக்கும் வடக்கு மாகாண சபை அமர்வில் இந்த அறிக்கை…
போர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது செய்யவேண்டும்
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் - கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில்தான் எமது உறவுகள் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். இதனைத் தற்போதைய மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசும் வெளிப்படையாகக் கூறியுள்ளது. எனவே, மகிந்தவையும், கோத்தபாயவையும் உடன் கைதுசெய்து கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை இந்த அரசு விசாரணையின் ஊடாக வெளிப்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவேண்டும்.இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். காணாமற்ேபானவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்களில் பலர் அன்றைய தினமே கொல்லப்பட்டிருக்கலாம். மகிந்த…
தமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள் நயப்புடைப்பு
பாடசாலை மாணவியுடன் தவறாகப் பழக முயன்றார் என்று தெரிவித்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொதுமக்களால் நையப் புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வவுனியா வைரவப்புளியங் குளத்தில் நடந்துள்ளது.குறித்த நபர் வைரவப்புளியங்குளம், 10ஆம் ஒழுங்கை புளியடி வீதியில் பாடசாலை மாணவியுடன் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று கூறப்படுகின்றது. இவர் தனியார் கல்வி நிலையங்களுக்கு முன் நின்று மாணவிகளுடன் பகிடி வதையில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் மாணவி ஒருவருடன் தவறாக நடக்க முயன்றார் என்று…
18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்
வவுனியாவில் இடம்பெற்று வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று(13) 18 ஆவது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் அவசரகாலச் சட்டத்ததை நீக்குமாறும் கோரி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டமானது இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எழிலன் உட்பட காணாமல்போனோரின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இம் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த ஆட்கொண்ர்வு மனு தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் எஸ்.எம்.எஸ் சம்சுதீன் முன்னிலையில் இன்றையதினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.இதேவேளை இன்றையதினம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவரத்தன மன்றில் முன்னிலையாகாத நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தமிழீழ…