தாயகம்
போர்க்குற்றச்சாட்டு: சிங்கள படைகளுக்கு அனுமதிமறுப்பு
போர்க்குற்றத்தில் ஈடுபட்ட காரணத்தினால் ஐ.நா. அமைதிப் படையில் இணைந்து கொள்வதற்கு 360 சிங்கள இராணுவத்தினருக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாலியில் ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக 212 இராணுவத்தினரைக் கவச வாகனங்கள் மற்றும் ஆயுதங்களுடன் தருமாறு ஐ.நா. கோரியிருந்தது. இதற்கா கத் தெரிவு செய்யப்பட்ட 400 படையினரைக் கொண்ட பட்டியல் ஐ.நாவுக்கு அனுப்பப்பட்டது.இதில் 40 பேரை மட்டுமே ஐ.நா அங்கீகரித்துள்ளது. ஏனையவர்கள் இறுதிக்கட்டப் போரில் பங்கேற்றவர்கள் என்ற அடிப்படையில், நிராகரிக்கப்பட்டுள்ளனர்.மாலியில் இராணுவத்தினருக்கான கட்டளை அதிகாரியாகப் பணியாற்றத் தெரிவு செய்யப்பட்ட கேணல் சமந்த…
யாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்று மாலையில் வீசிய சுழல் காற்றால் 21 வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட் டன. மழை காரணமாக குடாநாட்டில் பல இடங்களில் பகல் மற்றும் இரவு மின் தடைப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்று மாலையில் திடீரென வீசிய சுழல் காற்றால் பொம்மைவெளி , புதிய சோனகத் தெருப் பகுதிகளில் 21 வீடுகளின் கூரைகள் முழுமையாகத் தூக்கி வீசப்பட்டன. மேலும் பல குடும்பங்களும் பாதிப்படைந்துள்ளனர். இதேவேளை ஓர் வீட்டின் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டவேளையில் அதன் அருகில் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தின்மீது…
திருமலை சிறார் வன்புணர்வு- அடையாள அணிவகுப்பில் குளறுபடியா?
திருகோணமலை, மூதூர், பெரியவெளிக் கிராமத்தில், மூன்று சிறுமியர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கின், அடையாள அணிவகுப்பு, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று (05) இடம்பெற்றது.மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஜ.றிஸ்வான், முன்னிலையில், இந்த அடையாள அணிவகுப்பு, நேற்றுக் காலை 8:30 மணியிலிருந்து சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் இடம்பெற்றது.இந்த அடையாள அணிவகுப்பில், 35 பேர் நிறுத்தப்பட்டனர். அவர்களை, ஒவ்வொரு சிறுமியரும் நான்கு தடவைகள் பார்த்தனர். எனினும், அச்சிறுமியர் எவரையும் அடையாளம் காட்டவில்லை.இந்தச் சம்பவம் தொடர்பிலான வழக்கு, கடந்த…
கிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில்
கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் முப்பது கள் விற்பனை நிலையங்கள் சட்டரீதியான அனுமதிகளோடு இயங்கிவருகின்றன.இதில், 650 இற்கும் மேற்பட்ட பனை தென்னை வள தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த தொழிலாளர்கள் தாம் உற்பத்தி செய்யும் கள்ளினை குறித்த நிலையங்களில் வழங்கியே பிள்ளைகளின் படிப்புச் செலவு தொடக்கம் அன்றாட வாழ்க்கைச் செலவு வரை அனைத்திற்கும் இந்த தொழிலையே நம்பி வாழ்கின்றனர். இவர்களின் உழைப்பை நம்பியே அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் 4…
20வது தமிழர் விளையாட்டு விழா.
பாரிசின் மிகப்பெரிய பூங்கா – மைதானமான லு புசே (le Bourget) L’Aire des Vents Dugnyபூங்காவில் பல்லாயிரக்கணக்கில் தமிழ்மக்கள் ஒன்றுகூடி – ஒருதாய் பிள்ளைகளாய் முழுநாள் பொழுதைக்கழிக்கும் மாபெரும் தமிழர் விழா. 20வது தடவையாக எதிர்வரும் 02.07.2017 ஞாயிறன்று நிகழவுள்ளது. பிரான்ஸ் இளம் தமிழ் தலைமுறைக்கும், மூத்த தலைமுறைக்கும் இடையேயான பண்பாட்டுகைகோர்ப்பு தமிழால் ஒன்றுபட்டு - திரண்டால் மிடுக்கு பத்தொன்பதாண்டுகளுக்கு முன்னர் பிரான்சு வாழ் ஈழத்தமிழ்சமூகத்தின் மத்தியில் சமூக - பண்பாட்டு - விளையாட்டுத்தளத்தில் நட்புறவினை மேம்படுத்தவும் - உருவாகிவரும்அடுத்ததடுத்த தலைமுறைகளிடையே புரிதலை…
தென்இலங்கை குடி நீர் கொள்ளையர்கள் யாழில் நயப்புடைப்பு
யாழ்.மாவட்டத்திற்கு தண்ணீர் விநியோகஸ்த்தர் உரிமம் தருகிறோம் எனக் கூறி பலரிடம் பணத்தை கொள்ளையிட்டவர்கள் யாழ்.நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து பாதிக்கப்பட்டவர்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.“அக்குவா சேவ்” என்ற பெயரில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள். தமது தண்ணீரை யாழ்.மாவட்டம் முழுவதற்கும் விநியோகம் செய்வதற்கான உரிமத்தை வழங்குவதாகக் கூறி யாழ்.மாவட்டத்தில் சுமார் 30 பேருக்கு மேற்பட்டவர்களிடம் பணத்தை பெற்றுள்ளனர்.அவ்வாறு பணம் வழங்கிய பலருக்கு தண்ணீர் வழங்கப்படாததுடன் சிலருக்கு வழங்கப்பட்ட தண்ணீர் சுகாதார நியமங்களுக்கு அமைவாக இல்லை எனக்கூறி நுகர்வோர் அதிகாரசபையினால் தடை…