தாயகம்
வவுனியா, நல்லூரில் உண்ணா விரத போராட்டம், தாய் மயங்கி வீழ்ந்தார்
வடக்கில் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தின்போது கடத்தப்பட்டு காணாமற் போன உறவுகள் தொடர்பில் அரசாங்கம் தீர்க்க மான பதிலைத் தரவேண்டுமென வலியுறுத்தி நல்லூர் ஆலய முன்றலில் இன்றைய தினம் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகி ன்றது.குறித்த போராட்டமானது வடக்கில் காணாமற் போனோர் பாதுகாவலர் சங்கதினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் வடக்கில் யுத்த காலத்தில் காணாமற் போன நபர்களின் உறவுகளால் காலை 9 மணி முதல் மாலை 4 வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதே வேளை வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் தாயார் நேற்றுமாலை மயக்கமடை…
எமது நிலம் எமக்கே! கேப்பாபிலவு மக்கள் ஆர்ப்பாட்டம்
மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு வருவதனை முன்னிட்டு கேப்பாப்புலவு மக்கள் அங்குள்ள பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுத்துள்ளனர்.ஆனால் மைத்திரிபால முல்லைத்தீவுக்கு வரவில்லை என்றாலும் மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்து இருந்தனர்.முல்லைத்தீவு, கேப்பாப்புலவுக்கு ஜனாதிபதி வருகை தரும் போது கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என இராணுவத்தினர் எச்சரித்துள்ள நிலையிலும் அவர்கள் போராட்டத்தை இன்று காலை முதல் முன்னெடுத்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்து. முதற்கட்டமாக 53 குடும்பங்களுக்குரிய 243 ஏக்கர் காணியை தி இன்றைய தினம் விடுவிப்பார்…
முல்லையில் சில காணித்துண்டங்கள் மீள் அளிப்பு
முல்லைத்தீவில் இசிங்களப்படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட 243 ஏக்கர் காணி முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதியால் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் பவதி கேதீஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது. இந்த காணிகளுக்கான அனுமதிகள் பயனாளிகளுக்கு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதோடு காணி அனுமதிப்பத்திரம் இதுவரை கிடைக்கப்பெறாத முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலக பிரிவுகளை தேர்ந்த 1,350 பேருக்குச் சொந்தமான காணி அனுமதிப்பத்திரங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டது.
பிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்
மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார் முஸ்லிம் தாய் ஒருவர். அவரது மகன் திம்புலாகல வன ஆச்சிரமமொன்றில் இணைக்கப்பட்டுள்ளார். 7 வயதுடைய இந்த சிறுவந்தற்போது பௌத்த துறவியாக மாற்றபப்ட்டுள்ளார்.இச் சம்பவம் குறித்து திம்புலாகல வன ஆச்சிரமத்தின் தலைமை தேரர் மிலானே சிறியலங்கார தேரர் தெரிவிக்கையில்,சிங்கள இனவாத அமைப்புக்களும் தேரர்களும் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறார்களை மதமாற்றம் செய்வது இது புதிய விடயம் அல்ல.
திருமலை துறைமுகம் பற்றி பேசவே இல்லையே: இந்தியா
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் இலங்கை-இந்தியா இடையே எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.முன்னதாக, திருகோணமலை துறைமுக அபிவிருத்தியை இந்தியா வசம் ஒப்படைக்க இலங்கை-இந்திய அரசுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக, டெல்லி சென்றுள்ள அமைச்சர் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியை சீனா வசம் ஒப்படைத்திருக்கும் நிலையில், சீனா மற்றும் இந்தியாவுடன் சமமான உறவு நிலையைக் கடைப்பிடிக்க எண்ணியே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.ஆயினும், இந்தத் தகவலை மறுத்திருக்கும் இந்தியா,…
ரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு தள்ளுபடி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ் படுகொலை வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது