தாயகம்
ஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி
பப்புவா நியூகினியா மற்றும் னவுறு தீவுகளில் இருக்கும் ஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவதனை அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி உறுதிசெய்துள்ளார்.இது தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்று அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒபாமாவின் நிர்வாகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அகதிகளுக்கான திட்டத்தில் பப்புவா நியுகினி மற்றும் நவுறு போன்ற தீவுகளில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளை அமெரிக்கா பொறுப்பேற்க தீர்மானித்தது.இந்நிலையில் தற்போது டொனால்ட் டரம்ப இதனை ஏற்றுக்கொள்வாறா? என்ற கேள்வியெழுந்திருந்த நிலையில், குறித்த திட்டம் அமுல்படுத்தப்படும் என ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
அவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்
யாழில் இதுவரை ஆவா குழுவைச் செர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஆவா குழுவில் 62 பேர் உள்ளடங்குவதாக சட்டம், ஒழுங்கு அதிகாரிகள் இனங்கண்டுள்ளனர் என்றும் சிங்கள அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.இருப்பினும்,தற்போது 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த அமைச்சரான சாகல ரத்நாய க்க குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை,ஆவா குழு தொடர்பில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கண்ட வாறு கூறியுள்ளார்.யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் இடம் பெற்ற…
பெளத்த மதத்திற்கு முன்னுரிமை ஏன்?
அரசியல் கைதியாக நீண்டகாலம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விவேகா னந்தநகர் கிளிநொச்சியைச் சேர்ந்த விவேகானந்தனூர் சதீஸ் என அழைக்கப்படும் செல்லையா சதீஸ்கு மார் எழுதிய விடியலைத்தேடும் இரவுகள் கவிதை நூல் வெளியீட்டுவிழா நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச்சபை மண்டபத்தில் மாணிக்கம் ஜெகன் தலைமையில் நடைபெற்றுறது.இதில் பங்குபற்றிய சுமந்திரன் எம்.பி. அரச உத்தியோகத்தரை தகாத வார்த்தைகளால் தூசித்த மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதிக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் தொடர்ந்தும் உண்மையாகச் செயற்பட…
கிளினொச்சியில் மீழமைக்கப்பட்ட சந்தை திறப்பு
கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி தீ விபத்தினால் எரிந்த கிளிநொச்சிப் பொதுச் சந்தையினை மறுநாள் பதினேழாம் திகதி வந்து பார்வையிட்ட வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகவிரைவில் குறித்த சந்தையினை மீண்டும் இயங்க வைப்பதற்கு தற்காலிகக் கடைகளை அமைப்பதற்கு ஆவன செய்வதாகக் கூறிச்சென்றதன் பிரகாரமும் கரைச்சிப் பிரதேச சபையினரால் வழங்கப்பட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலும் தீவிபத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிப் பொதுச் சந்தை வர்த்தகர்களுக்கு தற்காலிகக் கடைகளை அமைப்பதற்கு செப்டம்பர் மாதம் இருபத்தி மூன்றாம் திகதி ஒன்பது மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு…
யாழில் வாள்வெட்டு ; முறைப்பாட்டை எடுக்க பொலிசார் மறுப்பு
யழ்ப்பாணத்தில் மீண்டும் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.செவ்வாய்க் கிழமை இரவு 8 மணியளவில் அந்திராணி வாய்க்கால் வீதியில் இளைஞர்கள் மூவர் துவிச்சக்கர வண்டியில் வேலை முடித்து வீடு திரு ம்பிக்கொண்டிருந்தபோது, இலக்கத்தகடுகளை கறுப்பு துணியினால் மறைத்திருந்ததுடன், முகங்க ளை யும் கறுப்புத் துணிகளால் மூடி தலைக்கவசம் அணிந்திருந்த நிலையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர், குறித்த இளைஞர்கள் மீது கைக்கோடரி போன்ற ஆயுதம் ஒன்றினால் தாக்குதல் நடாத்தி யிருந்தனர்.இதன்போது இளைஞர்களில் இருவர் காயமடைந்த நிலையில் நிலத்தில் விழுந்ததனைத் தொடர்ந்து,…
கிளிநொச்சியில் பாரிய மரக்கடத்தல்
கிளிநொச்சி – கல்மடு காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட பாலை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கல்மடு காட்டுப்பகுதியில் உள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட சுமார் 50,000 மேற்பட்ட பாலை மரக்குற்றிகளே இவ்வாறு மீட்கப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தல் இடம்பெற்றுவரும் நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை கல்மடுநகர் பகுதியல் உள்ள விமானப்படை அதிகாரிகளால் கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி முல்லைத் தீவிற்கான…