யாழில் இதுவரை ஆவா குழுவைச் செர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஆவா குழுவில் 62 பேர் உள்ளடங்குவதாக சட்டம், ஒழுங்கு அதிகாரிகள் இனங்கண்டுள்ளனர் என்றும் சிங்கள அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
இருப்பினும்,தற்போது 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த அமைச்சரான சாகல ரத்நாய க்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,ஆவா குழு தொடர்பில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கண்ட வாறு கூறியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் ஆவா குழுவுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.