முல்லையில் சில காணித்துண்டங்கள் மீள் அளிப்பு

முல்லைத்தீவில் இசிங்களப்படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட  243 ஏக்கர் காணி  முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதியால் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் பவதி கேதீஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது. இந்த காணிகளுக்கான அனுமதிகள் பயனாளிகளுக்கு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதோடு காணி அனுமதிப்பத்திரம் இதுவரை கிடைக்கப்பெறாத முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலக பிரிவுகளை தேர்ந்த 1,350 பேருக்குச் சொந்தமான காணி அனுமதிப்பத்திரங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டது.

அவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்

யாழில் இதுவரை ஆவா குழுவைச் செர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஆவா குழுவில் 62 பேர் உள்ளடங்குவதாக சட்டம், ஒழுங்கு அதிகாரிகள் இனங்கண்டுள்ளனர் என்றும் சிங்கள அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
இருப்பினும்,தற்போது 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த அமைச்சரான சாகல ரத்நாய க்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,ஆவா குழு தொடர்பில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கண்ட வாறு கூறியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் ஆவா குழுவுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது

விடுதலைப் புலிகள் இருந்த போது, யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான குற்றச்செயல்களும் இருக்கவில்லை அதனை செய்யும் குழுக்களும் இருக்கவில்லை என ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அனால் தற்போது ஆபத்தான பல குழுக்கள் இயங்குகின்றன அவற்றில் ஒனறுதான் .குடாநாட்டில் ஆவா குழு எனப்படும், உந்துருளிகளில் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு ஆகும். இந்த குழுவை முன்னைய ஆட்சி க்காலத்தில் வடக்கில் உயர் பதவியில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவரே, இரகசியமாக உருவாக்கினார் என்று ஆங்கில ஊடகம் ஒன்றுதெரிவித்துள்ளது.

மூத்த பொலிஸ்அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டியே இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், நன்கு திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட அடிப்படையில் இந்தக் குழு உருவாக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதையடுத்து, நடத்தப்பட்ட விசார ணைகளிலேயே பொலிஸ் இதனைக் கண்டுபிடித்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பாக ஊடகங்களிடம் எதையும் கூற வேண்டாம் என்று அரசியல் அதிகாரமட்டத்தில் இருந்து பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக குறித்த ஆங்கில ஊடகத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர், போருக்குப் பின்னர் வடக்கில் பல குழுக்கள் செயற்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்திய திரைப்படப் பாணியில் இந்தக் குழுக்களைச் சேர்ந்த இளைஞர்கள் வாள்கள், கத்திகளுடன், உந்துருளிகளில் திரிந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“2013ஆம் ஆண்டு இத்தகைய குழுவொன்றினால், பொலிஸைச் சேர்ந்த ஒருவரின் கை வெட்டப்பட்டது.

யாழ், கிளி மாவட்டங்களில் படையினர் குவிப்பு; மக்கள் அச்சத்தில்

ஆயுதம் தாங்கிய விசேட சிங்கள அதிரடிப்படையினரால் யாழ் குடா நாடு முற்றுகைக்கு உள்ளாக்கப்படுகின்றது,. பல்கலைக்கழக மாணவர்கள் சிங்களப்பொலிசாரின் துப்பாக்கி சுட்டிற்கு பலியான சம்பவத்தை காரமம் காட்டி இந்த படைக்குவிப்பு இடம்பெறுகின்றது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மாவட்டத்தில் சாதாரண காவல்துறையினர் எவரும் வீதிக் கடமைகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட்டு விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழ். நகரப் பகுதி மற்றும் நகருக்கு வெளியேயும் விசேட அதிரடிப் படையினர் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவகின்றனர்.

அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பொது மக்கள் - பொலிஸாருக்கு இடையே ஏற்பட்ட முறுகலை அடுத்து கிளிநொச்சியிலும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு போக்குவரத்து பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் இருவர் குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தனர். இச் சம்பவத்தைக் கண்டித்து வடமாகாணம் தழுவிய பூரண ஹர்த்தால் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.மாணவர்களுக்கு சார்பாக போராட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

போராளியை சுட்டுக்கொன்றமை: நட்டவீடுசெலுத்திய ராணுவம்

இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் விடுத லைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் குடும்பத்திற்கு முன்னாள் இராணுவ அதிகாரி யான லெப்டினன்ட் விமல் விக்ரம இன்று 20 இலட்சம் ரூபா நட்டஈட்டை செலுத்தி யுள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இந்த நட்டஈட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையிலேயே முன்னாள் இராணுவ அதிகாரி செலுத்தி யிருக்கின்றார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலுள்ள இராணுவ முகாமில் கைதுசெய்யப்பட்டிருந்த ரொபட் வோலிண்டன் என்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியை 1998-ஆம் ஆண்டு சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரியான விமல் விக்கிரமகே, முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

விமல் விக்கிரமகே என்ற முன்னாள் இராணுவ அதிகாரிக்கு பத்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி, இறந்த போராளியின் உறவினர்களுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடை பெற்றுக் கொடுக்குமாறும் உத்தரவிட்டி ருந்தார்.

இதற்கமையவே இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையில், முன்னாள் படை அதிகாரி 20 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்கினார்.

படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் போராளியின் மனைவி மறுமணம் செய்திருப்பதால் அவருக்கு பத்து லட்சம் ரூபாவும், முன்னாள் போராளியின் தந்தைக்கு பத்து இலட்சம் ரூபாவும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீட்டீற்கான நிதியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினரே திரட்டிக்கொடுத்துள்ளனர்.

எனினும் முன்னாள் படை அதிகாரிக்கான இந்த நிதி திரட்டல் நடவடிக்கையிலும் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தாய்நாட்டுக்கான படையினர் அமைப்பு என்ற பெயரில் முன்னாள் படைவீரர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் அமைப்பின் தலைவரான முன்னாள் மேஜர் தர அதிகாரியான சட்டத்தரணி அஜித் பிரசன்ன குற்றம்சாட்டியுள்ளார்.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…