மைத்ரிபால சிறிசேன நேற்றையதினம் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொண்டிருந்த போது உரையாற்றிக்கொண்டிருந்த மஹிந்த தரப்பு உறுப்பினர் இராணுவ சதிப் புரட்சியொன்று ஏற்படுவதற்கான சாத்தி யக்கூறுகள் ஏற்படுமென எச்சரித்துள்ளார்.
அவருடைய இந்தக் கருத்தைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பிய துடன், எதிர்த்தரப்பிலிருந்த ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதிலுக்குக் குரல் எழுப்பியதால் சிறிது நேரம் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
மஹிந்த விசுவாசியான தினேஷ் குணவர்த்தன உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்தும் வகையில் குரல் எழுப்பி வந்தனர்.
பொது எதிரணியினராகிய தமது உரிமைகள் நாடாளுமன்றத்தில் மறுக்கப்படுவதாகவும், உரிய நேரம் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா, பண்டாரநாயக்கவை கொலை செய்தவர்கள் சுதந்திரக் கட்சியினர் எனக் கூறியதை சுட்டிக்காட்டிய தினேஸ் குணவர்தன, தமது உரிமைகள் தொடந்தும் மறு க்கப்படுமானால், இராணுவ சூழ்ச்சிக்கான அச்சுறுத்தலொன்றை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்ச ரித்ததுடன், இந்த நிலைமையை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சபையில் இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பார்த்து தினேஸ் குணவர்தன கூறியதால் கொதித்தெழுந்த ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தினேஸ் குணவர்தனவிற்கு எதிராக கோச மிட்டனர்.
இதேவேளை, ஜனாதிபதி முன்னிலையில் இராணுவ சூழ்ச்சி ஏற்படப் போவதாகக் கூறுவது அவரை அகௌ ரவப்படுத்துவதாக அமைந்திருப்பதாக தினேஷ் குணவர்த்தனவின் பின்னர் உரையாற்றிய பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
2015ஜனவரி8ஆம் திகதி இரவு இராணுவப் சூழ்ச்சியொன்று மேற்கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டி ருந்ததாகவும், அதில் தினேஷ் குணவர்த்தன உள்ளிட்ட பலர் தொடர்புபட்டிருந்தனர் என்றும் அவர் குற்ற ம்சாட்டினார்.
எனினும், இராணுவத்தினர் அதற்கு அடிபணியவில்லை என்று தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க, இராணுவ த்தினர் ஒருபோதும் இவ்வாறான சூழ்ச்சிகளுக்கு இணங்கப்போவதில்லையென்றும் தெரிவித்துள்ளார்.