போரில் இறந்தவர்களையும் நினைவு கூர்வதற்கும் ஊனமுற்ற புலிப்போராளிகளுக்கு உதவவும் அரசாங்கம் முன்வரவேண்டும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
ஜே.வி.பி கலவரத்தில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடி இறந்தவர்களை நினைவுகூர இடமளித்துள்ள தை சுட்டிக்காட்டி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
அங்கவீனமுற்ற படையினருக்கு வாழ்வதற்கு அரசாங்கம் உதவிவருகிறது. இதேபோன்று யுத்தத்தினால் அங்கவீனமுற்ற விடுதலைப்புலி இளைஞர்களும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
வரவு- செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயங்களை குறி ப்பிட்டார்.
வன்னி பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவ ற்றை டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மோதல் ஏற்படாத வகையில் பிரச்சினைகளு க்குத் தீர்வு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
யுத்தத்தினால் அங்கவீனமுற்ற படையினருக்கு வாழ்வதற்கு வழியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் யுத்த த்தினால் அங்கவீனமுற்ற விடுதலைப்புலி இளைஞர்களும், இறந்தவர்களின் குடும்பத்தினரும் அநாதரவாக உள்ளனர்.இவர்களும் மனிதர்களே அவர்களுக்குச் செய்ய வேண்டிய சேவை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாகவும் அமைச்சர் கூறினார்.