வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான நிலைமைகள் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் எனினும் இதுவரை முடிவு எட்டப்படவில்லை எனவும் சம்பந்தன் மழுப்பியுள்ளார்.
இணைப்பை பொறுத்தவரையில் முடிவு எடுப்பதற்கு சில முக்கிய அம்சங்களில் உடன்பாடு எட்டப்பட வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் நாங்களும், முஸ்லிம் மக்களும் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரமுடியும் என நம்புவதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.
முஸ்லிம்களுடனான உடன்பாட்டை காணாது இந்த விடயத்தை நிறைவேற்றுவது கடினம். அதேவேளை எங்களுடைய இணக்கப்பாடும், எங்களுடனான ஒற்றுமையும் இல்லாது அவர்களாலும் ஒரு தீர்வை பெற முடியாது. இதனால் இவ்விடயத்தில் இருதரப்பும் நன்கு ஆராய்ந்து சில விட்டுக்கொடுப்புக்களுடன் முடிவொன்றை எட்டவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை காண்பதற்கு தாம் முயன்று வருவதாகவும், இந்த வருட இறுதிக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வொன்றை எட்ட முடியும் என எண்ணுவதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் புதிய அரசியல் சீர்திருத்த யோசனைகளில் வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான எந்தவிதமான திடகாத்திரமான முன்மொழிவுகளும் இல்லை என அரச தரப்பு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.