போர்க்குற்றத்துக்கு எதிரான அனைத்துலக விசாரணையினை தாம் ஏற்கப்போவதில்லை என மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார். அதற்கு பல நாடுகளையும் ஆதாரமாக காட்டியுள்ளார்
குறிப்பாக, ஈராக்கில் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பிரித்தானிய படையினருக்கு ஆதரவான நிலை ப்பாட்டை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கொண்டுள்ளதைப் போன்று, தாமும் இலங்கை படையினருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கப்போவதாக கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கூறியுள்ளார்.
ஈராக்கிய மக்கள் சார்பு வழக்கறிஞர் குழுவொன்றால் பிரிட்டனின் படைச்சிப்பாய்கள் அவமானத்துக்கு உட்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறு தெரேசா மே தெரிவித்ததை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்திரி, இவ்விடயத்தில் ஐ.நா. இலங்கை தொடர்பில் வேறு ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக் கூடாதென குறிப்பிட்டுள்ளார்.
மேலும், யுத்தக் குற்ற விசாரணைகளில் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான ஒரு நிலைப்பாட்டை கடைப்பிடிக்குமாறு கூறி உலகத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.