தாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம்

தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தாயக உறவுகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.


இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு நகரில் காந்தி சதுக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு ஒருமித்து கோஷங்களை எழுப்பினர்.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட குறிப்பாக இளைஞர்களினால் வலியுறுத்தி கூறப்பட்டது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எதிர்வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் மத்தியிலும் இடம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலரும் வெளியிட்டனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழகத்தின் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.

யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த இளைஞர் கழகங்கள், இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இதில் பங்கெடுத்திருந்தனர்.

வடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள்

நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற மைத்திரி ரணில் தலைமையிலான கூட்டு அரசாங்கத்தினாலும் தமிழர் தயாகப் பகுதிகளில் புதிதாக விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஏற்கனவே மகிந்த ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட விகாரைகளும் புதுப் பொலிவுடன் புனரமைக்கப்பட்டும் வருகின்றது.

அந்த வகையில் யாழ்ப்பாணத்தின் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்ததும் தற்போதும் உயர்பாதுகாப்பு வலயங்களாக இருக்கின்றதுமான பகுதிகளில் புதிய புதிய விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு வெளியில் பொது மக்கள் வாழ்கின்ற பகுதிகளிலும் இராணுவம் கடற்படையினர் நிலை கொண்டிருக்கின்ற பகுதிகளில் அமைக்கப்பட்ட விகாரைகளைப் புனரமைக்கின்ற நடவடிக்கைகள் மிகத் தீவிரமாகவும் அதேநேரம் மறைமுகமாகவும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.

இதற்கமைய யாழ்ப்பாணத்தின் மாதகல் பகுதியில் அமைந்துள்ள சம்பில் துறைப்பிரதேசத்தில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் பெருமளவிலனான தமிழ் மக்களின் நிலங்கள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் பெரியளவிலான விகாரையொன்று ஏற்கனவே அமைக்கப்பட்டு அந்த விகாரையை தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். அதனால் இந்த விகாரைக்கு புது வரைவிலக்கணமும் குறிப்பிடப்பட்டு அதாவது கடல்வழியாக அந்தப் பகுதிக்கு சங்கமித்தை வந்ததாகக் கூறி அது சிங்களப் பிரதேசமாக தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு கடற்படையாலும் அங்குள்ள பௌத்த பிக்குவாலும் சித்திரிக்கப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் தற்போது அந்த விகாரை புனரமைப்பு வேலைகளும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இப் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். அதனை அண்மித்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலப்பரப்பில் கடற்படையினரால் மிகப் பிராமாண்டமான ஹோட்டலொன்றும் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


தெற்கிலிருந்து யாழிற்கு சுற்றுலா என்ற பெயரில் வருகின்ற சிங்கள மக்களுக்கு இங்கு தான் கடற்படையினரதும் இராணுவத்தினரதும் மேலும் சிங்கள அரசியல்வாதிகளதும் உறவினர்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு புதிய வரலாறுகளும் கூறப்பட்டு வருகின்றது. மேலும் அந்த விகாரைக்குள்ளும் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட படங்களும் காண்பிக்கப்பட்டு புதிய வரலாறுகளைச் சித்தரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விகாரை உள்ள பிரதேசத்தில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடவும் மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் மீனவ குடும்பங்களும் பாதிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்

யாழில் இதுவரை ஆவா குழுவைச் செர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஆவா குழுவில் 62 பேர் உள்ளடங்குவதாக சட்டம், ஒழுங்கு அதிகாரிகள் இனங்கண்டுள்ளனர் என்றும் சிங்கள அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
இருப்பினும்,தற்போது 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த அமைச்சரான சாகல ரத்நாய க்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,ஆவா குழு தொடர்பில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கண்ட வாறு கூறியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் ஆவா குழுவுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆவா குழுவை பிடிக்க விசேட நடவடிக்கை!

ராணுவத்தால் உருவாக்கப்பட்ட ஆவா குழுவை தேடி கண்டு பிடிக்க விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனராம்.

சுன்னாகத்தில் காவல்துறை புலனாய்வாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுக்கு ஆவா குழு, துண்டுப் பிரசுரம் மூலம் உரிமை கோரியுள்ளதையடுத்து, வடக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா நகரப் பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவுகளும், காவல்துறைக் குழுக்களும் நிறுத்த ப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் சம்பவத்தை அடுத்து, வடக்கின் பிரதான நகரங்களில் சிறப்பு அதிரடிப்படை அணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆவா குழுவைக் கண்டறிவதில் மாத்திரமன்றி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணியிலும் சிறப்பு அதிரடிப்படை அணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஆவா குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சன்னா, தேவா, பிரகாஸ் ஆகிய அடையாளம் காணப்பட்ட ஏனைய உறுப்பினர்களைத் தேடி சிறப்பு அதிரடிப்படையினர் வேட்டையில் இறங்கி யுள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது

ராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது

விடுதலைப் புலிகள் இருந்த போது, யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான குற்றச்செயல்களும் இருக்கவில்லை அதனை செய்யும் குழுக்களும் இருக்கவில்லை என ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அனால் தற்போது ஆபத்தான பல குழுக்கள் இயங்குகின்றன அவற்றில் ஒனறுதான் .குடாநாட்டில் ஆவா குழு எனப்படும், உந்துருளிகளில் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு ஆகும். இந்த குழுவை முன்னைய ஆட்சி க்காலத்தில் வடக்கில் உயர் பதவியில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவரே, இரகசியமாக உருவாக்கினார் என்று ஆங்கில ஊடகம் ஒன்றுதெரிவித்துள்ளது.

மூத்த பொலிஸ்அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டியே இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், நன்கு திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட அடிப்படையில் இந்தக் குழு உருவாக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதையடுத்து, நடத்தப்பட்ட விசார ணைகளிலேயே பொலிஸ் இதனைக் கண்டுபிடித்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பாக ஊடகங்களிடம் எதையும் கூற வேண்டாம் என்று அரசியல் அதிகாரமட்டத்தில் இருந்து பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக குறித்த ஆங்கில ஊடகத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர், போருக்குப் பின்னர் வடக்கில் பல குழுக்கள் செயற்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்திய திரைப்படப் பாணியில் இந்தக் குழுக்களைச் சேர்ந்த இளைஞர்கள் வாள்கள், கத்திகளுடன், உந்துருளிகளில் திரிந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“2013ஆம் ஆண்டு இத்தகைய குழுவொன்றினால், பொலிஸைச் சேர்ந்த ஒருவரின் கை வெட்டப்பட்டது.

யாழ், கிளி மாவட்டங்களில் படையினர் குவிப்பு; மக்கள் அச்சத்தில்

ஆயுதம் தாங்கிய விசேட சிங்கள அதிரடிப்படையினரால் யாழ் குடா நாடு முற்றுகைக்கு உள்ளாக்கப்படுகின்றது,. பல்கலைக்கழக மாணவர்கள் சிங்களப்பொலிசாரின் துப்பாக்கி சுட்டிற்கு பலியான சம்பவத்தை காரமம் காட்டி இந்த படைக்குவிப்பு இடம்பெறுகின்றது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மாவட்டத்தில் சாதாரண காவல்துறையினர் எவரும் வீதிக் கடமைகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட்டு விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழ். நகரப் பகுதி மற்றும் நகருக்கு வெளியேயும் விசேட அதிரடிப் படையினர் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவகின்றனர்.

அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பொது மக்கள் - பொலிஸாருக்கு இடையே ஏற்பட்ட முறுகலை அடுத்து கிளிநொச்சியிலும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு போக்குவரத்து பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் இருவர் குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தனர். இச் சம்பவத்தைக் கண்டித்து வடமாகாணம் தழுவிய பூரண ஹர்த்தால் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.மாணவர்களுக்கு சார்பாக போராட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

கொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை வரவில்லை

சிங்கள காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான .பல்கலைக்கழக மாணவர்களின் சம்பவத்திற்கு நீதி கோரி யாழ் செயலகம் மற்றும் வடமாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் தங்போது ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தஒ போராட்டத்திற்கு காவல்துறையினர் கடமைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுன்னாகத்தில் காவல்துறை மீது வாள்வெட்டு

பிரதேசத்தில் கடமையில் இருந்த இரண்டு காவல்துறையினர் மீது இன்று (23/10/2016) பிற்பகலில் நடந்த வாள் வெட்டு தாக்குதலில், அவர்கள் காயமடைந்திருப்பதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
சுன்னாகத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் எதிரில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதில் காவல்துறையைச் சேர்ந்த நிமல் பண்டார, பி.எஸ்.நவரட்ன ஆகியோர் காயமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆறு பேர் கொண்ட குழுவொன்று காவல்துறையினர் மீதான இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

வாள்வெட்டு நடத்தியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அங்கு பெருமளவில் அதிரடி காவல்துறையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

பெருமளவில் குவிக்கப்பட்ட அதிரடி காவல்துறையினர்
இந்தச் சம்பவம் யாழ் பிரதேசத்தில் மக்கள் மத்தியில் பற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாள்வெட்டுக் குழுவினரின் அட்டகாசம் யாழ் மாவட்டத்தில் அதகரித்திருப்பதையடுத்து, அதனைக் கட்டுப்படுத்துவதற்காக களத்தில் இறக்கப்பட்டிருந்த விசேட காவல்துறை அணியொன்று யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திப்பகுதியில், வியாழக்கிழமை இரவு கடமையில் இருந்தபோது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து யாழ் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையைத் தொடர்ந்து காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருந்த சூழலிலேயே இந்த வாள்வெட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
குளப்பிட்டிச் சந்தி சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவராகிய பவுண்ராஜ் எனப்படும் விஜயகுமார் சுலக்சன் என்ற மாணவன் சுன்னாகம் கந்தரோடையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய இறுதிக்கிரியைகள் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவனாகிய நடராஜா கஜனின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றுள்ளது. பெருந்திரளான மக்கள் இந்த இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி கிளாலி பகுதி குண்டு வெடிப்பில் ஒருவர் மரணம்
இதற்கிடையில் கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேசத்தில் கிளாலி என்ற இடத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பிரதேசத்திற்குள் சென்றபோது, குண்டொன்று வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றுமொருவர் காயமடைந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பளை ஆர்த்திநகரைச் சேர்ந்த 37 வயதுடைய கறுப்பையா ராஜா என்பவர் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

யாழில் வாள்வெட்டில் ஈடுபடுவோர்க்கு பிணைகள் கிடையாது: நீதிமன்றம்

வாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவை கைது செய்ய பொலிஸ் அணிகள் களத்தில் இறங்க வேண்டியிருந்தது. இதுவே இன்றைய யாழ் குடாநாட்டின் நிலைமையாகும். இந்த நிலையில் வாள்களுடன் கைதானவர்களுக்கு பிணை வழங்க முடியாது என மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.

வாள்வெட்டுக்களில் ஈடுபட்டிருந்த மற்றும் கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த குற்ற ச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவன் இரத்தினசிங்கம் செந்தூரனின் வழக்கிலேயே இவ்வாறு பிணை வழங்க மறுப்பு தெரிவித்து பிணை மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார்.

இந்த வழக்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் இன்று(18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின் போது நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்ததாவது,

செந்தூரன் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டதையடுத்து, யாழ் குடாநாட்டில் வாள்வெ ட்டுச் சம்பவங்கள் குறைவடைந்து வீதி அடாவடித்தனங்கள் குறைந்திருந்தன.

இப்போது யாழ் குடாநாட்டில் சில வன்செயல்கள் தலை தூக்கியிருக்கின்றன. இந்த நிலை யில் செந்தூரன் உள்ளிட்ட குழுவினரைப் பிணையில் செல்ல அனுமதித்தால், இங்கு அமைதி நிலைமை பாதிக்கப்படும்.

இந்த மாணவன் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 3 மாதங்கள் தலைமறைவாகியிருந்தார். அந்தக் காலகட்டத்திலும் வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெற்றதாக பொலிஸ் அறிக்கை களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆயினும், இவரைப் பிணையில் விட்டால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். விசாரணை களுக்கு ஒத்துழைப்பின்மை ஏற்படும். இந்தக் குழுவினர் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. எனவே, இவர்களுக்கு பிணை வழங்க முடியாது.

வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் எந்த நபருக்கும் இலகுவில் பிணை கிடையாது என்ற செய்தி யாழ் குடாநாட்டில் வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வலம்வர எத்தனிக்கும் ஒவ்வொருவருக்கும் சென்றடைய வேண்டும்.

எங்கள் முன்னிலையில் உள்ள பிணை வழக்கு கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த வழக்காகும். விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே வழக்குகளில் பிணை வழங்க முடியும் என சட்டம் பரிந்துரைக்கின்றது.

இந்த மாணவன் கல்வியில் சிறப்பாகச் செயற்பட்டவர். கல்லூரி மாணவர் தலைவன். விளையாட்டில் திறமைசாலி என, அவருடைய பிணை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இவர் தலைமறைவாகியிருந்த போது, அவரை நீதிமன்றில் கொண்டு வந்து சரணடையச் செய்வதற்குக்கூட அவருடைய பெற்றோர் முயற்சிக்கவில்லை.

ஆனால், இவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 3 மாதங்கள் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபராகப் பெயர் பெற்றிருந்தார்.

இவருடைய கைது மிகவும் கடுமையான நடவடிக்கைகளில் சிரமத்தின் மத்தியிலேயே, சாத்தியமானது.

இவரைப் பிணையில் விடுவதற்கு விதிவிலக்கான எந்தவித காரணமும் பிணை மனுவில் முன்வைக்கப்படவில்லை எனவே பிணை மனுவை இந்த நீதிமன்றம் நிராகரிக்கின்றது.

குடாநாட்டில் வாள்களைக் கையில் எடுத்தால், இலகுவில் பிணை வழங்கப்பட மாட்டாது என்பதை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என்றார் நீதிபதி இளஞ்செழியன்.

இந்த வழக்கில் அரச சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்தன் அரச தரப்பில் முன்னிலையாகி இரு ந்தார்.எதிர் தரப்பில் சட்டத்தரணி திருக்குமரன்முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்த க்கது

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…