ராணுவத்தால் உருவாக்கப்பட்ட ஆவா குழுவை தேடி கண்டு பிடிக்க விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனராம்.
சுன்னாகத்தில் காவல்துறை புலனாய்வாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுக்கு ஆவா குழு, துண்டுப் பிரசுரம் மூலம் உரிமை கோரியுள்ளதையடுத்து, வடக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா நகரப் பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவுகளும், காவல்துறைக் குழுக்களும் நிறுத்த ப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் சம்பவத்தை அடுத்து, வடக்கின் பிரதான நகரங்களில் சிறப்பு அதிரடிப்படை அணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆவா குழுவைக் கண்டறிவதில் மாத்திரமன்றி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணியிலும் சிறப்பு அதிரடிப்படை அணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஆவா குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சன்னா, தேவா, பிரகாஸ் ஆகிய அடையாளம் காணப்பட்ட ஏனைய உறுப்பினர்களைத் தேடி சிறப்பு அதிரடிப்படையினர் வேட்டையில் இறங்கி யுள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது