தாயகம்
கிளினொச்சியில் மக்கள் மீது சிங்கள காவல்துறை தாக்குதல்
வடக்கில் பூரண கதவடைப்பு இடம்பெற்றபோதும் சிங்கள அரச சார்பற்ற, கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமைபோன்று இட ம்பெற்று வந்தது இந்தநிலையில் குறித்த தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப் போவதாக வதந்தி பரவியது இதனையடுத்து கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பொலி ஸாரும் விசேட அதிரடிப் படையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டதை அடுத்து அங்கு பத ற்ற நிலைமை உருவாகியது.இதனையடுத்து பொலிசாருக்கும், பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முறுகல் தற்போது மோதலாக மாறியுள்ளது. இதனால் கிளிநொச்சி நகரில்…
மாணவர்கள் படுகொலை; முடங்கியது வடக்கு, அனைத்து தரப்பும் ஆதரவு
பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் சிங்கள காவல்துறையினரால் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து வடக்கு முழுவதும் இன்று கதவடைப்பு இடம்பெறுகின்றது.தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் நடைபெறாத நிலையில், வியாபார நிலையங்களும் மூடப்பட்டு சன நடமாட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதால் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தென் தமிழீழத்திலும் ஆர்ப்பாட்டம்
வடக்கில் இடம்பெறும் ஆர்ப்பாட்ட பேரணியினைத் தொடர்ந்து கிழக்கிலும் இன்று மாணவர்களால் ஆர்ப்பாட்டம் இடம் பெறுகின்றது. கல்லடி விபுலானந்தர் அழகியல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ். கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த வாரம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஷன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டமையை கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை வரவில்லை
சிங்கள காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான .பல்கலைக்கழக மாணவர்களின் சம்பவத்திற்கு நீதி கோரி யாழ் செயலகம் மற்றும் வடமாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் தங்போது ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.இந்தஒ போராட்டத்திற்கு காவல்துறையினர் கடமைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுன்னாகத்தில் காவல்துறை மீது வாள்வெட்டு
பிரதேசத்தில் கடமையில் இருந்த இரண்டு காவல்துறையினர் மீது இன்று (23/10/2016) பிற்பகலில் நடந்த வாள் வெட்டு தாக்குதலில், அவர்கள் காயமடைந்திருப்பதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.இவர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.சுன்னாகத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் எதிரில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.இதில் காவல்துறையைச் சேர்ந்த நிமல் பண்டார, பி.எஸ்.நவரட்ன ஆகியோர் காயமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.ஆறு பேர் கொண்ட குழுவொன்று காவல்துறையினர் மீதான இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகின்றது.வாள்வெட்டு நடத்தியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அங்கு பெருமளவில் அதிரடி காவல்துறையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.பெருமளவில்…
மாணவர்களின் இறுதி நிகழ்வு; அரசியல்வாதிகள் பேசத் தடை
சிங்கள காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று இரணைமடு பொது மயானத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.காலை பத்து மணிக்கு அவரது இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவா்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகா்கள் என பெரும் திரளானவா்கள் கலந்துகொள்ள இறுதி ஊா்வலம் இடம்பெ ற்றது.நிகழ்வின் போது வடக்கு மாகாண கல்வி அமைச்சரும் பதில்…