தாயகம்
யாழ் மாணவர்கள் கொலை- மைத்திரியின் விசேட குழு
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (22) வெளியிட்டுள்ளது.இந்நிலையில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இதேவேளை குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக்குழுவொன்றும் யாழிற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி
கொக்குவிலில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஐந்து பொலி சாரையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார் இது குறித்து மேலும் தெரியவருவதாவது கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்த பல்கலை க்கழக மாணவர்களின் பிரேத பரிசோதனையில் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் இறந்தார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை இச் சம்பவம் தொடர்பாக 5 பொலிசாரை கைது செய்ததாக அரசாங்கம் அறிவித்திருந்தது. அந்த ஐந்து பொலிசாரும் இன்று திங்கட்கிழமை காலை 10…
யாழில் கலைப்பீட மாணவர்கள் பலி
யாழ்.கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.30மணியளவில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம்வருட மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். இந்த விபத்துச் சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுகந்தராசாசுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசாகஜன் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.குறித்த இருவரும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்று வருகின்றார்கள்.உயிரிழந்த இருவரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக் குறித்த விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவ…
கடத்தப்பட்ட மாணவர்கள் அப்பாவிகள்: சிப்பாய் சாட்சி
தெற்கில் கோத்தபாய ராஜபக்ஷ கும்பலால் வெள்ளை வானில் கடத்தப்பட்ட காணாமல் போகச்செய்யப்பட்ட 5 மாண வர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என கடற்படைப் புலனாய்வு பிரி வின் சிப்பாய் அளுத் கெதர உப்புல் பண்டார நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார். 2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள 5 மாணவர்களில் மூவர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னி லையில் இடம்பெற்றது. குறித்த 5 மாணவர்களும் விடுதலைப்புலிகளுடன்…
யாழில் வாள்வெட்டில் ஈடுபடுவோர்க்கு பிணைகள் கிடையாது: நீதிமன்றம்
வாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவை கைது செய்ய பொலிஸ் அணிகள் களத்தில் இறங்க வேண்டியிருந்தது. இதுவே இன்றைய யாழ் குடாநாட்டின் நிலைமையாகும். இந்த நிலையில் வாள்களுடன் கைதானவர்களுக்கு பிணை வழங்க முடியாது என மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.வாள்வெட்டுக்களில் ஈடுபட்டிருந்த மற்றும் கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த குற்ற ச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவன் இரத்தினசிங்கம் செந்தூரனின் வழக்கிலேயே இவ்வாறு பிணை வழங்க மறுப்பு தெரிவித்து பிணை மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார்.இந்த வழக்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் இன்று(18) விசாரணைக்கு…
நடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை
யுத்தம் மற்றும் விபத்துக்களால் காயமடைந்து சுயமாக நடமாட முடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்கும் செயற்றிட்டம் ஒன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந் நிலையில் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த விசேட செயற்றிட்டம் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.இதன்போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான செயற்திட்டத்தை எமது…