தாயகம்
மாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம்
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு உரிய விசாரணை கோரி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தினை நடாத்திவருகின்றனர்.மாணவர்களால் முன்னெடுத்துவரும் போராட்டத்தினை அடுத்து பல்கலை நிர்வாகத்தி னருடனும் மாணவ பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்துவதற்காக அமைச்சர் சுவாமிநாதன் தற்போது யாழ் பல்கலை க்கழகத்திற்கு வருகை தந்துள்ளார்.இதேவேளை அமைச்சர் சுவாமிநாதனுடனான சந்திப்பு குறித்து செய்தி சேகரிப்பதற்காக பல்கலைக்கழகத்திற்கு உள்ளே ஊடகவி யலாளர்கள் சென்ற சமயம் அவர்களை மாணவர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்க மறுத்ததனால் அவர்கள் அனைவரும் அவ்விடத்திலிருந்து வெளியேறி சென்றுவிட்டனர்.இதேவேளை யாழ் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள்…
ஆவா குழுவை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த கோரும் அதிசயம்
வட தமிழீழத்தில் சிங்கள புலனாய்வாளர்களால் உருவாக்கப்பட்ட “ஆவா” குழுவினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.உத்தியோகப்பற்றற்ற ரீதியில் இந்த வேண்டுகோளை இராணுவம் விடுத்துள்ளது. அவசரகால நிலைமை அமுலில் இல்லாததனால் சிவில் நிலைமையில் தலையீடு செய்ய முடியாதுள்ளதாகவும் இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.வடக்கில் பாதுகாப்பற்ற ஒரு நிலைமை உருவாகி வருவது ஆபத்தானது என புலனாய்வுத்துறை அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டி யுள்ளது.தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையினை குளப்பும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த ஆவா குழுவினை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த அனுமதி கோருவது தமிழ்…
தென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில் உயிரிழப்பு
தென் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தை தங்கராசா - வசந்தகுமார் (வயது48) அவுஸ்திரேலியாவில் உயிரிழந்ததாக மட்டக்களப்பிலுள்ள அவரது மனைவிக்கு உயவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.அவுஸ்திரேலியாவில் NO;152 Rock State, bathurst, new South wel 2795 என்ற முகவரியில் வசித்து வந்த தனது கணவர் இறந்து விட்டதாக ஒக்டோபர் 28 அதிகாலை அவுஸ்திரேலியாவில் உள்ள உறவினர் ஒருவரின் தொலைபேசியூடாக தகவல் கிடைத்ததாக வாழைச்சேனை கிண்ணையடியை சேர்ந்த உயிரிழந்தவரின் மனைவி ரஞ்சிதமலர் தெரிவித்தார்.அவுஸ்திரேலியாவில் தனது ஒரு மகளும் கணவரும் வசித்து வந்ததாகவும், நான்கு…
வன்னியில் இருந்து கடத்தப்படும் மரக்குற்றிகள்
வன்னிப்பிரதேசத்தில் இருந்து களவாக தென் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருந்த ஒருதொகை பெறுமதிமிக்க மரக்குற்றிகள் கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.குறித்த மரக்குற்றிகளை வன்னேரிக்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று கொண்டு செல்லப்பட்ட வேளையிலேயே அவை பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த மரக்குற்றிகளை ஏற்றிசென்ற பார ஊர்தி பொலிஸாரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
விக்னேஸ்வரன் அரசியக் சட்டத்தை மீறியுள்ளாராம்
முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் இலண்டனுக்கு சென்றமை தொடர்பில் அரசியல் சட்டத்தை மீறியுள்ளதாக சிங்கள அரசு கூறியுள்ளது.இதேபோன்று, தற்பொழுது பதில் முதலமைச்சராக கடமையாற்றுபவரும் வடக்கு ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவில்லையெனவும் ஆளுனர் செயலகம் கூறுகின்றது.வட மாகாண முதலமைச்சர் கடந்த 14 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதியான இன்று வரை வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது விஜயம் முடியும் வரை பதில் முதலமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாதுள்ளதனால், கடந்த 15 ஆம் திகதி கூடிய வட மாகாண சபைக் கூட்டத்தின் போது சபைத் தலைவர்…
மாணவர்களின் போராட்டம், தமிழில் வந்தது கடிதம்.
சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்கள் இருவரது விசாரணையினை நியாயமாக நடத்தக்கோரி பல்கலைக்கழக மாணவர்களால் வடமா காண ஆளுநருக்கூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட மஜரினை தான் ஜனாதிபதிக்கு அனுப்பியதனை உறுதிப்படுத்தும் விதத்தில் அதன் பிரதியை ஆளுநர் றெஜினோல்ட் கூரே பல்கலைக்கழக கலைப்பீட மாணவ ஒன்றிய தலைவருக்கு சிங்களத்தில் முன்னர் அனுப்பி வைத்திருந்தார்.ஆனால் இந்த சிங்கள மொழியிலான அறிக்கையினை மாணவர் ஒன்றியம் நிராகரித்த நிலையில் இன்றையதினம் தமிழில் அந்த அறிக்கையினை அனுப்பி வைத்துள்ளதாக கலைப்பீட மாணவ ஒன்றிய தலைவர் தெரிவித்துள்ளார்.