தாயகம்
கிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு
முற்றாக சிதைந்த நிலையில் அடையாளம் காணமுடியாத அளவிற்கு உருக்குலைந்த நிலையில் கிளிநொச்சி – உருத்திரபுரம் வடக்கு நீவில் பிரதேச காட்டுப்பகுதியில், சடலமொன்று இன்று (வியாழக்கிழமை) மீட்கப்ப ட்டுள்ளது.சடலத்தை கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் பார்வையிட்டுள்ளதோடு, கிளிநொச்சி மாவட்ட நீதவான் பார்வையிட்டதன் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வை க்கப்படவுள்ளது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
ஆனையிறவு தொடரூந்து நிலையம் இன்று திறப்பு
ஆனையிறவு தொடரூந்து நிலையம் இன்று திறக்கப்படவுள்ளது. உதவியினால் கட்டி எழுப்பப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைப் பாட சாலை மாணவ மாணவர்களின் சேமிப்பு மற்றும் அர்ப்பணிப்பும் நன்கொடையாக வழங்க ப்பட்ட நிதியும் அவர்களினால் மேற்கொள்ளப்படும் தேசிய நற் பணியினை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் ஆசிரியர்களினால் வழங்கப்பட்ட நன்கொடையினையும் சேர்த்து கல்வி அமைச்சின் நிதியுதவியுடன் அன்பின் தரிப்பிடம் என கட்டி எழுப்பப்பட்ட ஆனையி றவு புகையிரதநிலையம் நாளையதினம் திறந்து வைக்கப்பட்வுள்ளது.கல்வி இராஜாங்க அமைச்சர் வி .எஸ் .இராதாகிருஸணன் மற்றும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்…
ஆவா குழுவை பிடிக்க விசேட நடவடிக்கை!
ராணுவத்தால் உருவாக்கப்பட்ட ஆவா குழுவை தேடி கண்டு பிடிக்க விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனராம்.சுன்னாகத்தில் காவல்துறை புலனாய்வாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுக்கு ஆவா குழு, துண்டுப் பிரசுரம் மூலம் உரிமை கோரியுள்ளதையடுத்து, வடக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா நகரப் பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவுகளும், காவல்துறைக் குழுக்களும் நிறுத்த ப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சுன்னாகம் சம்பவத்தை அடுத்து, வடக்கின் பிரதான நகரங்களில் சிறப்பு அதிரடிப்படை அணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.ஆவா குழுவைக் கண்டறிவதில் மாத்திரமன்றி, சட்டம் ஒழுங்கை…
ராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது
விடுதலைப் புலிகள் இருந்த போது, யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான குற்றச்செயல்களும் இருக்கவில்லை அதனை செய்யும் குழுக்களும் இருக்கவில்லை என ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.அனால் தற்போது ஆபத்தான பல குழுக்கள் இயங்குகின்றன அவற்றில் ஒனறுதான் .குடாநாட்டில் ஆவா குழு எனப்படும், உந்துருளிகளில் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு ஆகும். இந்த குழுவை முன்னைய ஆட்சி க்காலத்தில் வடக்கில் உயர் பதவியில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவரே, இரகசியமாக உருவாக்கினார் என்று ஆங்கில ஊடகம் ஒன்றுதெரிவித்துள்ளது.மூத்த பொலிஸ்அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டியே இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.போர் முடிவுக்கு…
மன்னாரில் மீனவர்களில் படகு, இயந்திரங்கள் பறிமுதல்
மன்னார் மாவட்டம் முத்தரிப்புத்துறை பிரதேசத்தில் மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களின் படகு மற்றும் இயங்திரங்களை சிங்கள கடற்படை அபகரித்துள்ளது.போர் காலங்கள் போல சிங்களப்படைகளின் ரோந்து நடவடிக்கைகள் மன்னார் கடற்பரப்பில் காணப்படுகின்றன. போர்க் கப்பல்கள் கரையிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் தரித்து நிற்பதாகவும் இதன் காரணத்தால் மீன்பிடித் தொழிலுக்குச் செல்வதற்கு மீனவர்கள் அச்சம் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து மீனவக் குடும்பங்களிடையே பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் இருவர் முத்தரிப்புத்துறை பிரதேச வாசிகளால் அண்மையில் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த…
யாழ், கிளி மாவட்டங்களில் படையினர் குவிப்பு; மக்கள் அச்சத்தில்
ஆயுதம் தாங்கிய விசேட சிங்கள அதிரடிப்படையினரால் யாழ் குடா நாடு முற்றுகைக்கு உள்ளாக்கப்படுகின்றது,. பல்கலைக்கழக மாணவர்கள் சிங்களப்பொலிசாரின் துப்பாக்கி சுட்டிற்கு பலியான சம்பவத்தை காரமம் காட்டி இந்த படைக்குவிப்பு இடம்பெறுகின்றது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். மாவட்டத்தில் சாதாரண காவல்துறையினர் எவரும் வீதிக் கடமைகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட்டு விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.யாழ். நகரப் பகுதி மற்றும் நகருக்கு வெளியேயும் விசேட அதிரடிப் படையினர் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவகின்றனர்.அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பொது மக்கள் - பொலிஸாருக்கு இடையே ஏற்பட்ட…