முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக, அவரது விசுவாசியான இராணு வப் புலனாய்வுப் பிரிவின் தற்போதைய தலைமை அதிகாரி, ஜனாதிபதி ஊடாக சதித்திட்டங்களை அரங்கேற்றி இருப்பதாக மாதுலு வாவே சோபித்த தேரர் உருவாக்கிய நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இராணுப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியான பிரிகேடியர் துவான் சுரேஷ் சாலி, மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கால த்திலும் எட்டு வருடங்களாக இந்தப் பதவியை வகித்தவர் என்றும் குறிப்பிட்டுள்ள நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்க த்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய, குறித்த இராணுவ அதிகாரி இரகசியப் பொலிசாரால் கைது செய்யப்படுவதற்கு உள்ள நிலையிலேயே ஜனாதிபதிக்கு பிழையான தகவல்களைக் கொண்டு விசாரணைகளை முடக்க முயற்சி ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தாஜூடீன் படுகொலை, பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் மற்றும் ரவிராஜ் படு கொலை உட்பட கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் உட்பட பாரதூரமான குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் இரகசியப் பொலிசார், குழிதோண்டி புதைக்கப்பட்ட ஆவணங்களைத் தோண்டி எடுத்து, விசாரணைகளை மேற்கொண்டுள்ள விதம், ஒட்டுமொத்த நாடும் பாராட்டத் தக்கது என்றும் நியாயமான சமூகத்திற்கான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த விசாரணைகள் 95 வீதமானவை பூர்த்தியடைந்துவிட்டதாகவும், இன்னமும் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு தீர்ப்பு வழங்க வேண்டியது மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும் கூறிய பேராசிரியர் சரத் விஜேசூரிய, இதற்கமைய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு இந்த குற்றங்களில் நேரடி தொடர்பிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரி வித்தார்.
இந்த விசாரணைகளை தடுக்க ஆரம்பம் முதல் முயன்றுவந்த இராணுவப் புலானாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி, இராணுவம் உட்பட முப்படையினரும் ஜனாதிபதி தொடர்பில் கடும் ஆத்திரத்துடன் இருப்பதாக பொய்யான தகவல்களை ஜனாதிபதிக்கு கூறி அவரை தனது ஆளுகைக்குள் எடுத்து அவரைக் கொண்டு இரகசிய பொலிசாரின் விசாரணைகளை கடுமையாக விமர்சித்து அதன் ஊடாக விசாரணையை முடக்க எத்தனித்துள்ளதாகவும் நியாயமான சமூகத்திற்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேரா சிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்தார்.
அத்துடன் இந்த இராணுவப் புலனாய்வு அதிகாரியின் பிழையான தகவல்கள் காரணமாகவே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கட்ந்த 12 ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் ஆற்றிய உரையின் போது ஊழல், மோசடிகள் மற்றும் பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் இரகசிய பொலிசார், பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அரசியல் நிகழ்ச்சி நிர்களுக்கு அமைய செயற்படுவதாக குற்றம்சாட்டியிருந்ததாகவும் பேராசிரியர் விஜேசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.