உலகம்
ஈராக்-மெசுல் நகரைக் கைப்பற்ற படை நடவடிக்கை
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரிடம் இருந்து மெசூல் நகரை மீண்டும் கைபற்றுவதற்காக, தாக்குதல் ஒன்றை இராக் படைப்பிரிவுகள் தொடங்கியுள்ளன.இந்த தாக்குதலை அறிவித்தபோது, வெற்றிக்கான நேரம் வந்துவிட்டது என்று இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி கூறியிருக்கிறார்.அது முதல் பீரங்கி குண்டு தாக்குதல் ஒலி கேட்ட வண்ணம் இருக்கிறது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய அரசு குழுவினர் மெசூல் நகரை கைப்பற்றினர். இப்போது இந்த குழுவினரின் கடைசி வலுவிடமாக இது விளங்குகிறது.இராக் மற்றும் அமெரிக்காவால் விமானத் தாக்குதல் நடத்தப்படும் இந்த நகரை சுற்றி, 3…
டொனால் ட்ரம்பின் செல்வாகு வீழ்ச்சி
2005ம் ஆண்டு டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவின் போது, செட்டுக்கு வெளியே பேசிய ட்ரம்பின் கொச்சைப் பேச்சு வீடியோ, அமெரிக்க அதிபர் தேர்தலைப் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வீடியோ வெளியானது முதல் படு மோசமான தோல்வியை நோக்கி ட்ரம்ப் போய்க்கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் மூல காரணம் புஷ் குடும்பமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.ட்ரம்பும் புஷ் குடும்பமும் குடியரசுக் கட்சியின் உட்கட்சி தேர்தலில் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் தம்பி ஜெப் புஷ்ஷும் களத்தில் இருந்தார். அவரை 'சக்தி இல்லாதவர்' என்று மிகக் கடுமையாக விமரிசித்தார் ட்ரம்ப்.…
செளதி வான் தாக்குதலை கண்டித்து ஏமனில் பேரணி
செளதி தலைமையிலான கூட்டணி படையினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து, இத்தாக்குதலை கண்டித்து ஏமன் தலைநகர் சனாவில் பிரம்மாண்ட பேரணி ஒன்று நடைபெற்றது."கோப எரிமலை" என்றழைக்கப்பட்ட இந்தப் பேரணியில் , செளதி எதிர்ப்பு வாசகங்களை ஆயிரக்கணக்கான ஏமன் மக்கள் முழக்கமிட்டனர்.சனிக்கிழமையன்று, சனாவில் நடைபெற்ற ஒரு இறுதிச் சடங்கு நிகழ்வில் வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது.500க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் காயம் அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.ஹூதி போராளிகளுக்கு எதிராக அதிபர் அப்தராபா மன்சூர் ஹேடியின் ஆதரவோடு கடந்த ஆண்டு…
டொனால்ட் ட்ரம்ப் -பில்கிளிங்டன் இன்று மோதல்
ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெறும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் தொலைக்காட்சி விவாதத்தில், பெருங்கோடீஸ்வர வர்த்தகரான டொனால்ட் டிரம்ப் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் பாலியல் வரலாற்றை பயன்படுத்தக்கூடும் என்று டிரம்பின் மூத்த ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார். டிரம்ப் மற்றும் ஹிலரி இருவரின் அந்தரங்க வாழ்க்கையிலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகள் உள்ளன என்று ரூடி ஜூலியானி தெரிவித்திருக்கிறார். பெண்கள் பற்றிய டிரம்பின் கீழ்த்தரமான கருத்துக்களால் எழுந்த கண்டனங்களுக்கு பதிலளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.